மாஸ்டர் படத்தின் ஃபஸ்ட் லுக்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. இது வெளிவந்த சில நிமிடங்களில் சமூக வலைதளங்கள் முழுவதும் விஜயின் இந்த மாஸ்டர் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் தான் ஒவ்வொரு பக்கங்களிலும் இருந்து பறந்து கொண்டிருக்கிறது.
பிகில் படத்துக்குப் பிறகு தனது 64-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர். விஜயுடன் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் என்பதே பலரின் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. காரணம், இதற்கு முன்னால் விக்ரம் வேதா திரைப்படத்தில் வில்லனாக தனது நடிப்பை திரைமுழுவதும் புதிய கோணத்தில் வெளிப்படுத்திருந்தார். இந்த படத்தில் இவர் விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார் என்பது இந்த படத்தின் கூடுதல் பலமாக உள்ளது.  இவர்களுடன் சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ், விஜே ரம்யா, ஆன்ட்ரியா, கைதி பட வில்லன் அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர்  நடித்து வருகின்றனர்.

படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் நடைபெற்று வரும் நிலையில் விஜய் கல்லூரி பேராசிரியராகவும், விஜய் சேதுபதி அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. கைதி படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் படம் என்பதால் இது இன்னும் அதிக எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. அடுத்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கபடும் படங்களில் இது ஒரு முக்கிய இடம் பிடித்துள்ளது.