உலக நீரிழிவு நாள்

சர்க்கரை நோய் மனிதன் முற்றிலும் வெறுக்கும் ஒரு கொடிய நோய். இதனை கண்டு அஞ்சாத ஆட்களே இருக்க முடியாது. காரணம் அந்த அளவிற்கு இதன் தாக்கத்தை நோயாளிகளின் மீது ஏற்படுத்தும். இதற்கான விழிப்புணர்வு பெற உலகம் முழுவதும் உலக நீரிழிவு நாள் (World Diabetes Day) என்று 2006 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒவ்வொரு ஆண்டும் இன்சுலின் மருந்தினை கண்டுபிடித்த சார்ள் பெஸ்ட் என்பவருடன் இணைந்து 1921 இல் பிரட்ரிக் பான்ரிங் என்பவர் கண்டுபிடித்தார். இவரது நினைவாக நவம்பர் 14ம் தேதி இந்த உலக நீரிழிவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இது இவரது பிறந்த தினத்தன்று இவரை நினைவு கூற இந்த நாள் கொண்டப்படுகிறது.

சர்வதேச ரீதியில் ஏறத்தாழ 150 நாடுகளில் உள்ள மக்கள் ஒன்றிணைந்து இந்நோய் சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். சர்வதேச நீரிழிவு நோய் சம்மேளனத்தினாலும் உலக சுகாதார நிறுவனத்தினாலும் 1991ல் முதல் முறையாக நீரிழிவு தினம் அறிமுகப்படுத்தப்பட்டது.