அடிக்கல் நாட்டு வழிப்பாடு விழா

கோவை, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குனர் சி.ஏ.வாசுகி அவர்கள் கல்லூரி மேலாண்மைக்குழுவின் பொருளாளர் மருத்துவர் ஓ.ஏன்.பரமசிவம் திருக்கயிலாயத் திருத்தல யாத்திரைப் பயணம் சென்று வந்ததன் நினைவாகக் கல்லூரி வளாகத்தில் புதிதாக கொங்கு கணபதி கோவில் கட்டவேண்டுமென்று முடிவுசெய்யப்பட்டது. அவ்வகையில் இன்று (04.11.2019) காலை 5.00 மணியளவில் திருக்கோவில் அடிக்கல் நாட்டு வழிப்பாடு விழா  நடைபெற்றது. செஞ்சேரி மலை திருமண்டபத்தின் ஆதீனம் தவத்திரு.சிவராமசாமி அடிகளார் அவர்களின் தலைமையில் அடிக்கல் நாட்டும் வழிபாடு  மிகச் சிறப்பாக நடந்தேறியது. கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குனர் சி.ஏ.வாசுகி, மேலாண்மைக்குவின் பொருளாளர் மருத்துவர் ஓ.ஏன்.பரமசிவம் அடிக்கல் நாட்டினார்கள். இவ்வழிபாட்டு விழாவில் கல்லூரியின் முதல்வர் லட்சுமணசாமி, முதன்மை கல்வி அலுவலர் சின்னுசாமி, கல்விப்புல முதன்மையர் பாலசுப்பிரமணியம் ஆகியோருடன் கல்லூரி ஆசிரியர்களும், அலுவலர்களும், மாணவர்களும் பங்கேற்றனர்.