காதல் கலாட்டா

காதல் எல்லோருக்கும் பிடிச்ச விஷயம் ஆனால் சினிமாவுல பார்க்கும்போது மட்டும் நம்ம வாழ்கையில இப்படி ஒரு காதல் வருமா என்று சில சமயங்களில் நினைக்க தோணும். தெலுங்கு சினிமா எப்போவும் அடி தடி வெட்டு குத்துன்னு ரத்த பூமிய பல படங்களில் நம்ம பார்த்திருப்போம். தெலுங்கு சினிமாவுல கூட அழகான காதல் கதைகள் காட்ட முடியும்னு Fidaa படம் உணர்த்தி இருக்குன்னு சொல்லலாம்.

‘Fidaa’ வருண் தேஜ், சாய் பல்லவி ஆகியோர் படத்தின் முக்கிய கதா பாத்திரமாக வளம் வருகின்றனர். வருண் தேஜ், வெளிநாட்டில் மருத்துவ படிப்பு படித்து கொண்டு இருக்கும் தருணத்தில் தன் அண்ணனுக்கு கல்யாணம் பண்ண வேண்டும் என்று பெண் பார்க்கும் படலத்தை ஏற்பாடு செய்கிறார். ஆந்திரா பக்கத்துல ஒரு அழகான கிராமத்தில் வசிக்கும் விவசாயி குடும்பத்தை சேர்ந்த பெண் தன் அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடிவு எடுக்கிறார் வருண். அப்பொழுது அந்த கிராமத்தில் தன் அண்ணனுக்கு பெண் பார்த்த பெண்ணோட தங்கையாக சாய் பல்லவி அங்கு இருப்பதை கண்ட வருணுக்கு சாய் பல்லவி மேல் ஈர்ப்பு வர தொடங்கியது.

அது காதலா இல்ல நட்பானு வருண் மனதில் ஆயிரம் குழப்பங்கள். சாய் பல்லவி சுட்டி தனமான எண்ணம் வருண் மனதில் ஆழமான காதலை உண்டாக்கியது. வருண் தேஜின் குணம் சாய் பல்லவிக்கும் பிடித்து போக சாய் பல்லவி க்கும் வருண் மேல் காதல் வர ஆரம்பிக்குது. தன்னோட காதல வருண் கிட்ட சொல்லலாம்னு போகும்போது சில சொல்ல முடியாத காரணத்தினால் சொல்ல முடியாமல் போய் விடுகிறது. அதற்கு பிறகு வருண் அண்ணன் கல்யாணம் நல்ல படியாக முடிந்து எல்லோரும் திரும்பி வெளிநாடு சென்று விடுகின்றனர்.

அதற்கு அப்புறம் வருண் சாய் பல்லவி காதல் எப்படி ஒன்னு சேர்ந்தது என்பதை நகைச்சுவையாக சொல்லி இருப்பதுதான் Fidaa படத்தின் கதை சுருக்கம்.

இயக்குனர் சேகர் இயற்றிய இப்படம் மக்களை சந்தோசப்பட வைத்து உள்ளது. சாய் பல்லவி நடிப்பு, படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் என்று ஆணித்தரமாக சொல்லலாம். ஒளிப்பதிவு விஜய் சி குமார், வெளிநாட்டின் அழகையும், நம் கிராமத்து அழகையும் கண் முன் கொண்டு வந்து நிறுத்து உள்ளார்.

இசை ஷக்தி காந்த் கார்த்திக். ஒவ்வொரு பாடலும் மனதில் நிற்கும் அளவுக்கு அமைத்து உள்ளார். மொத்தத்தில் வாழ்கையில் காதல் மிக முக்கியமான ஒன்று என்பதை இப்படம்  நிரூபித்துள்ளது.

– பாண்டிய ராஜ்