இரட்டை இசை பிரியர்கள்

சினிமாவும் வாழ்க்கையும் ஒன்னுன்னு சொல்லுவாங்க. காரணம் வாழ்க்கையில் இருக்கும் சில நிகழ்வுகள்தான் சினிமாவில் பிரதிபலிக்கிறது. நாம் பார்க்கும் சினிமாவில் பல கற்பனை கதா பாத்திரங்கள் அமைந்து இருக்கும். அதில் ஒன்றுதான் இரட்டையர்கள் கதா பாத்திரம். இரட்டை சகோதர சகோதிரிகள் பார்க்கும் பொழுது நமக்கு எப்போவும் ஆச்சர்யமாகத்தான் இருக்கும். அதில் திறமை உள்ள இரட்டையர்களை பார்க்கும்பொழுது கடவுள் கொடுத்த வரப்பிரசாதம்தான் என்று நினைக்க தோன்றும். ஆமாம் நம்ம கோவை மண்ணுல பல இசை திறமைகள் இருக்கும் இரட்டை  சகோதரிகளை சந்திக்கும் நேரம் கிடைத்தது. அவர்கள்தான் பைரவி மற்றும் ரஞ்சனி. இந்த இரட்டைச்  சகோதரிகள் வாழ்கையில் நடந்த சில நிகழ்வுகளை நம்மிடம் பகிர்ந்து கொண்டதை காண்போம்..

எல்லாத்துக்கும் எங்களோட வணக்கத்தை தெரிவித்து கொள்கிறோம். ரொம்ப சந்தோஷமா இருக்கு ‘தி கோவை மெயில்’ பத்திரிக்கையில் எங்களை பற்றி சொல்வதற்கு. இசை எங்க குடும்பத்துல ரொம்ப காலமாக இருக்கு கூடிய விஷயம். சின்ன வயசுல இருந்தே எங்களுக்கு இசை மேல் ஒரு தனி ஈர்ப்பு இருந்தது. படிப்படியா சங்கீதத்த கத்துக்க தொடங்கினோம்.   எங்களுக்கு மேல ஒரு அக்கா இருக்காங்க, சாருமதி.  அவுங்கதான் எங்களோட முதல் குருன்னு சொல்லுவோம். எங்க அப்பாவுக்கு இசை மீது மிகுந்த ஆர்வம். அதனால எங்களுக்கு இசை கத்துக்க மிகவும் உதவிய இருந்தது. சின்ன வயசா இருக்கும்போது ரஞ்சனிக்கு  த்ரோட் பிரச்சனை இருந்தது.

அதுனால என்னால பாட்டு கத்துக்க முடியல.  இருந்தாலும் நான் என் இசையை விட்டு கொடுக்கவில்லை. ராஜலட்சுமி பத்மநாபன் கிட்ட வீணை கத்துக்க ஆரம்பிச்சேன். வீணை நம் நாட்டின் கலாச்சார இசை. அதில் இருக்கும் சங்கீத உணர்வை நாம் கண்டிப்பாக உணர வேண்டும். பைரவி, ரஞ்சனி நாங்க இரண்டு பேரும் இசையை உலகம் முழுக்க கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறோம். அதனால தான் கிளாசிகள் சங்கீதத்தை சினிமா பாடல்களுடன் சேர்த்து ஒரு புது வடிவுல கொடுக்க தொடங்கினோம். பல தொலைகாட்சியில் எங்களோட இசை கச்சேரி வர ஆரம்பித்தது. அதற்கு பிறகு எங்க அக்கா, நாங்க இரண்டு பேரும் சேர்ந்து வாய்ஸ் வைரஸ் என்ற மியூசிக் பேண்ட் சடர்ட் பண்ணோம். இசை ஒரு மனிதனை மாற்றுமா என்ற கேள்வி பலருக்கு இருந்து வருகிறது.

ஒவ்வொரு மனிதன் உள் உணர்வில் ஒரு இசை இருக்கின்றது அதை யாரும் சிந்திப்பது கிடையாது. நம் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் நம் நாட்டின் பரம்பாரிய இசையை கத்துக்கொடுக்க வேண்டும். ஆனால் இப்பொழுது வெஸ்டர்ன் இசை கலாச்சாரத்தை தேடி பலர் சென்று கொண்டு இருக்கிறார்கள். வெஸ்டர்ன் இசை வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. நம் நாட்டின் இசையை மறந்து விடாதீர்கள் என்று சொல்கிறோம். நம் பெற்றோர்கள் சில தவறான செயல்பாடுகளை செய்து வருகிறார்கள். இசை பள்ளியில் சேர்ந்த சில நாட்களில் நம் குழந்தை பாட வேண்டும் என்று. இசைக்குன்னு ஒரு தனித்துவம் இருக்கின்றது. அதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.

முறையாக நம் நாட்டின் இசையை கற்றுக்கொண்டால் வெற்றி உங்களை தேடி வரும். அதற்காகத்தான் நங்கள் இசை மேல் எல்லோருக்கும் ஒரு விழிப்புணர்வு வர வேண்டும் என்று எங்கள் வாய்ஸ் வைரஸ் மூலமாக பலருக்கு அடிப்படை இசை தன்மைகளை பற்றி தெரிவித்து கொண்டு இருக்கிறோம்.

வேகமாக இயங்கும் இந்த உலகத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் பல பிரச்சனை இருக்கின்றது. அதில் இருந்து எப்படி வெளியில் வர முடியும் என்று பலர் எதிர்பார்த்து வருகிறார்கள். இசை ஒரு மனிதனை அமைதிப்படுத்தி அவன் மனதை ஒரு நிலைப்படுத்த கூடியதாக இருக்கின்றது. படிக்கும் இளம் சமுதாயம் இசை மேல் கண்டிப்பாக அக்கறை செலுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் நம் மனதில் இருக்கும் குழப்பங்கள் தீர்ந்து தெளிவான பாதையை நம்மால் உணர முடியும்.

எங்க அக்கா சாருமதி ஆகட்டும், நாங்க இரண்டு பேரும் ஆகட்டும், எங்கள் கல்லூரி படிப்பியில் கோல்டு மெடல் பட்டம் பெற்றவர்கள்.  காரணம் இசை என்று ஆணித்தரமாக சொல்லுவோம். எங்களை ஒரு நிலைப்படுத்தி எங்களை பட்டதாரி ஆக்கியது இசைதான். அவிநாசிலிங்கம் கல்லூரியில் எங்கள் கல்லூரி படிப்பை முடித்தோம். இசை எங்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இன்றும் இருந்து வருகின்றது. எங்கள் இசை பயணம் மக்களை சந்தோசப்படுத்தும் அளவுக்கு எதிர்காலத்தில் இருக்கும் என்று சொல்லி கொண்டு விடை பெறுகிறோம். பெண்களால் எந்த இலக்கையும் எட்டி பிடிக்க முடியும். உங்கள் திறமை உங்கள் கையில்.

– பாண்டியராஜ்.