குணபடுத்த முடியுமா சிறுநீரக புற்றுநோய்?

சிறுநீரக புற்றுநோய் பற்றிய பல்வேறு கேள்விகளுக்கு கோவை கே.எம்.சி.எச்.மருத்துவமனை டாக்டர் எம்.ஆனந்தன் விளக்கம் கூறுகிறார்.

சிறுநீரக புற்றுநோய் யாருக்கெல்லாம் வருகிறது? அதனுடைய பாதிப்பு என்ன?

சமீப காலமாக சிறுநீரகப் புற்றுநோய் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக புகை, மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கும், ரசாயன தொழிற் சாலையில் பணிபுரிபவர்களுக்கும் இத்தகைய புற்றுநோய் வருகிறது. சிறுநீரகத்தில் உருவாகும் கட்டிகளில் 80சதவீத கட்டிகள், புற்றுநோய் கட்டிகளாகவே இருக்கின்றன. 50சதவீதம் பேருக்கு புற்றுநோய் கட்டி 4 முதல் 5 செ.மீ  அளவில் இருப்பது தொந்தரவு இல்லாத நிலை 20-30 பேருக்கு கட்டி பெரியதாக இருக்கிறது. அது முற்றிய நிலையாகும்.

சிறுநீரகத்தில் கட்டி ஏற்படுவதின் அறிகுறிகள், அதை கண்டறிவதற்கான பரிசோதனை என்ன?

கட்டி சிறியதாக இருந்தால் அறிகுறிகள் எதுவும் தெரியாது. கட்டி பெரிதானால் வயிற்றில் வீக்கம், வயிற்றுவலி, மூச்சிறைப்பு, சிறுநீரில் ரத்தம் போன்ற அறிகுறிகள் இருக்கும். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் உதவியுடன் சிறுநீரகத்தில் கட்டி இருப்பதை கண்டறியலாம். சிறிய அளவில் துவக்க நிலையிலேயே கண்டு பிடிக்கப்பட்டால் கட்டிகளை அகற்றுவது எளிது. கட்டி பெரிதாக இருந்தாலோ இரத்தக் குழாய் பாதித்திருந்தாலோ சிறு நீரகத்தையும் சேர்த்து அகற்ற வேண்டிய அவசியம் ஏற்படும்.

சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரக செயல்பாடு இயல்பாகவே குறைவாக இருக்கும். இக்குறைபாடுள்ளவர்களுக்கு சிறு நீரகத்தை முழுமையாக அகற்றாமல், கட்டியை மட்டும் அகற்ற முயற்சி செய்ய வேண்டும். 40வயதிற்கு மேல் உள்ளவர்கள். 2 ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை மற்றும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்து சிறுநீரகத்தில் கட்டிகள் எதுவும் உள்ளதா என்று பரிசோதித்து முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சிறுநீரக புற்றுநோய்க்கு சிகிச்சைகள் என்னென்ன?

முன்பு, சிறுநீரகத்தில் சிறியதாக கட்டி இருந்தால், வயிற்றில் 15 முதல் 25 செ.மீ அளவிற்கு அறுவைசிகிச்சை செய்து கட்டி உள்ள சிறுநீரகத்தை முழுமையாக அகற்றும் நிலை இருந்தது. தற்பொழுது ரோபோடிக் மூலம் அறுவை சிகிச்சை செய்யப்படுவதால், வயிற்றில் 4அல்லது 5 துளைகள் மட்டுமே இட்டு கட்டியை மட்டும் துல்லியமாக அகற்ற முடியும். கட்டி அகற்ற முடியாத நிலை ஏற்பட்டால் மட்டுமே சிறுநீரகத்தை அகற்ற வேண்டும். 2 அல்லது 3 நாட்களில் வீட்டிற்கு சென்று விடலாம். ஒருவாரத்தில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடலாம். இதனால் ரோபோடிக் அறுவை சிகிச்சை சிருநீரக பாதிப்புகளுக்கு சரியான தீர்வாக அமைகிறது.

மேலும் விபரங்களுக்கு சிறுநீரக – ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எம்.ஆனந்தன், கே.எம்.சி.எச். மருத்துவமனை. போன் :0422-4324642 மொபைல் : 99942-60476, 733 9333 485, இ-மெயில் : dranandan@kmchhospitals.com.