கோவையில் புதிய பயோ மீத்தேன் இயந்திரம்

கோவை மாநகராட்சியில் ரூ.45 லட்சம் மதிப்பிலான ஸ்விஸ் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட இயற்கை எரிவாயு கலன் செயல்பாட்டினை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத்,  தலைமையில் ஸ்விஸ் கான்பெடரேசன் துணைத்தலைவரும், சுற்றுச்சூழல் போக்குவரத்து, எரிசக்தி தகவல் தொடர்புத்துறையின் தலைவர் சிமோனேட்டா சொம்மருகா துவக்கி வைத்து பார்வையிட்டார்கள்.

கோவை மாநகராட்சி, பிரதான அலுவலகத்தில் capacities திட்டத்தின்கீழ், ஸ்விஸ் முகமையின் நிதியுதவியுடன் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சிப்பணிகளை பார்வையிடுவதற்காக வருகை தந்த ஸ்விஸ் கான்பெடரேசன் துணைத்தலைவரும்,     சுற்றுச்சூழல் போக்குவரத்து, எரிசக்தி தகவல் தொடர்புத்துறையின் தலைவர் சிமோனேட்டா சொம்மருகா மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத், மலர்க்கொத்து வழங்கி வரவேற்றார்கள்.

பின்னர் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் கோவை  மாநகராட்சியில் நடைபெற்றுவரும் ஸ்மார்ட்சிட்டி வளர்ச்சிப் பணிகள் மற்றும் கல்வி வளர்ச்சி, குடிநீர் மேலாண்மை, சாலைகள், பூங்காக்கள், குளங்கள் மேம்பாட்டு பணிகள் குறித்து ஸ்விஸ் கான்பெடரேசன் துணைத்தலைவருக்கு விளக்கிக் கூறினார்கள்.

இந்நிகழ்வின்போது இந்தியாவிற்கான ஸ்விஸ் தூதுவர் ஆண்ட்ரஸ்பாம், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன்.கே.அர்ச்சுணன், மாநகரப்பொறியாளர் லட்சுமணன் ஆகியோர் உடனிருந்தார்கள்.

          பின்னர், சிங்காநல்லூர் குளக்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்விஸ் கான்பெடரேசன் துணைத்தலைவரும், சுற்றுச்சூழல் போக்குவரத்து, எரிசக்தி தகவல் தொடர்புத்துறையின் தலைவருமான சிமோனேட்டா சொம்மருகா மாநகராட்சியில் ஸ்மார்ட்சிட்டி திட்டப்பணிகள் மற்றும் கோவை மாநகராட்சியில் capacities திட்டத்தின்கீழ் ஸ்விஸ் நிதியுதவியுடன் நடைபெற்றுவரும் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத், விளக்கிக் கூறினார்கள்.

பின்னர், சிங்காநல்லூர் குளக்கரையில் ஸ்விஸ் கான்பெடரேசன் துணைத்தலைவரும்சுற்றுச்சூழல் போக்குவரத்து, எரிசக்தி தகவல் தொடர்புத்துறையின் தலைவர் மரக்கன்றுகளை நட்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையாளர் பிரசன்னா ராமசாமி அவர்கள், மாநகரப்பொறியாளர் லட்சுமணன், சமூக ஆர்வலர் எஸ்.பி.அன்பரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.