கே.பி.ஆர் குழுமத்தின் 8 வது பட்டமளிப்பு விழா

கே.பி.ஆர் குழுமத்தின் 8 – ம் ஆண்டு பட்டமளிப்பு விழா தெக்கலூர், குவாண்டம் நிட்ஸ் கலை அரங்கில் நடைபெற்றது. இதில் 15 பேர் பல்கலைக்கழக அளவில் தங்கம், வெள்ளி பதக்கங்களை பெற்றுள்ளனர்.

கே.பி.ஆர் குழுமத்தில் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள நூற்பாலைகள் மற்றும் கார்மெண்ட்ஸ்களில் 25,000 பெண் தொழிலாளர்களில் 3,500 பேர் பணிபுரிந்து கொண்டே கல்வி கற்கிறார்கள். இதுவரை 24,500 பேர் தங்களது உயர் கல்வியினை இங்கு வெற்றிகரமாக முடித்துள்ளனர். 2018 – 2019 ஆம் கல்வி ஆண்டில் 329 பெண்கள் இளங்கலை மற்றும் முதுகலை பிரிவுகளில் பட்டம் பெற்றனர்.

மேலும், BCA, BBA, B.COM(CA), B.COM, B.LIT ஆகிய 5 துறைகளிலும் பல்கலைக்கழக அளவில் முதல் மூன்று இடங்களையும் கேபிஆர் நிறுவனத்தை சேர்ந்த பெண்களே பெற்றுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் கேபிஆர் குழுமத்தின் தலைவர் கே.பி. ராமசாமி, தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக துணைவேந்தர் பார்த்தசாரதி, பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர், நன்னெறி கழகத்தின் தலைவர் இயகோகா சுப்ரமணியம் மற்றும் மாற்றம் அறக்கட்டளை நிறுவனர் சுஜித் குமார், கேபிஆர் கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் பாலுசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கேபிஆர் குழுமத்தின் செயல் இயக்குநர் சக்திவேல் வரவேற்புரை வழங்கினார். கேபிஆர் குழுமத்தின் தலைவர் கே.பி. ராமசாமி அறிமுக உரை நிகழ்த்தினார்.

பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர், நன்னெறி கழகத்தின் தலைவர் இயகோகா. சுப்ரமணியம் மற்றும் மாற்றம் அறக்கட்டளை நிறுவனர் சுஜித் குமார் ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள்.

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக துணைவேந்தர் பார்த்தசாரதி தலைமை உரையாற்றி பட்டம் பெற்றவர்களுக்கு பட்டங்களையும் பதக்கங்களையும் வழங்கினார். கேபிஆர் கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் பாலுசாமி அவர்கள் உறுதிமொழி வாசிக்க பட்டம் பெற்ற அனைவரும் உறுதி எடுத்துக் கொண்டனர். விழாவின் இறுதியாக கேபிஆர் நிறுவனத்தின் துணைத்தலைவர் சோமசுந்தரம் நன்றியுரை வழங்கினார்.