ஜானகி சிக் ஷாலயா பள்ளியில் மாணவர்கள் தின விழா

கோவைப்புதூர், ஜானகி சிக் ஷாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாளை உலக மாணவர்கள் தினமாக கொண்டாடினார்கள். இதில் பள்ளிமாவர்களுக்கு பேச்சுபோட்டி, கவிதைப்போட்டி போன்ற போட்டிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளிமாணவர்களுக்கு கலாம் பற்றிய வரலாற்றை பள்ளி ஆசிரியர்கள் விரிவாக உரையாற்றனர். இந்நிகழ்ச்சியில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.