கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம்

கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் பெண்களுக்கான மார்பக பரிசோதனை முகாம் நவம்பர் 15ம் தேதி வரை நடக்கிறது. இதில் இலவச ஆலோசனை, டிஜிட்டல் மேமோகிராம், ஹைடெக் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் உள்ளிட்ட மார்பக பரிசோதனை சலுகை கட்டணத்தில் மேற்கொள்ளப்படுகிறது.

இது குறித்து கே.எம்.சி. ஹெச். மருத்துவமனை மார்பக புற்றுநோய் கதிரியக்க நிபுணர் டாக்டர்.ரூபா கூறியதாவது மார்பக புற்றுநோய் நகர்ப்புற பெண்களை அதிகம் பாதிக்கிறது. இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 2 பெண்களில்  ஒருவருக்கு முற்றிய நிலையில்தான் மார்பக புற்றுநோய் கண்டுபிடிக்கப்படுகிறது. மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிவதன் மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் உயிரை காப்பாற்ற முடியும். பொதுவாக எல்லா புற்றுநோய்களையும் எந்த அறிகுறியும் இல்லாமல், துவக்க நிலையில் கண்டுபிடிக்க முடியாது. ஆனால், அறிகுறி இல்லாமலிருந்தாலும் கூட மார்பக புற்றுநோயை பரிசோதனை மூலம் கண்டுபிடித்து விடலாம்.

பெண்கள் எந்த வயதினராக இருந்தாலும், மார்பு, மார்பகங்களில் வலி, மார்பகத்தில் கட்டி (வலியுடன் அல்லது வலியில்லாமலும்), மார்பகக்காம்புகளில் கசிவு, மார்பகக்காம்பு பின் நோக்கி செல்லுதல், அக்குள்களில் வீக்கம் ஆகிய அறிகுறிகளில் எதாவதொன்று இருந்தாலோ, இரத்தம் சம்பந்தமான நெருங்கிய சொந்தத்தில் யாருக்காவது மார்பக புற்றுநோய் இருத்தாலோ உடனடியாக மருத்துவரை அணுகவும்.

இத்தகைய அறிகுறிகள் இல்லாவிட்டாலும், 40 வயதிற்கு மேற்பட்ட ஆரோக்கியமுள்ள பெண்களும் இந்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். மேலும் பெண்கள் தங்களது சுய பரிசோதனை மூலம் கண்டுபிடிக்க முடியாத ஆரம்ப நிலை கட்டிகளை கூட மேமோகிராம் பரிசோதனையில் கண்டுபிடித்துவிடலாம்.  இது ஒரு எக்ஸ்ரே முறையை போன்ற  பரிசோதனையாகும். இதன் மூலம் மார்பகத்தில் கட்டி உருவாவதற்கு முன்பான சிறிய மாற்றங்களை கூட முன்கூட்டியே கண்டுபிடித்து விடலாம். கண்டுபிடிக்கப்படும் 90 சதவீத கட்டிகள் புற்றுநோய் இல்லாத கட்டிகளாகவே இருக்கும். 10 சதவீத கட்டிகள் மட்டுமே புற்றுநோயாக இருக்கும். இவற்றை முன்கூட்டியே கண்டுபிடிக்கும்போது முழுமையாக குணப்படுத்திவிடலாம். மார்பகத்தை அகற்றாமலே கட்டிகளை மட்டும் அகற்றும் அளவிற்கு நவீன சிகிச்சை முறை வந்து விட்டது. கே.எம்.சி.ஹெச்.மருத்துவமனையில் தேர்ந்த மருத்துவ குழுவினரை கொண்ட மார்பக பரிசோதனை மையம் ஒரே இடத்தில் சர்வதேச தரத்தில் அமைந்துள்ளது.

இங்கு உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு  பெண்களுக்கான மார்பக பரிசோதனை முகாம் அக்டோபர் 1 முதல் நவம்பர்  15ம் தேதி வரையிலான இம்மாதம் முழுவதும் நடக்கிறது. இதில் டிஜிட்டல் மேமோகிராம் ரூ.999 சலுகை கட்டணத்திலும், ஹைடெக் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ரூ.450 சலுகை கட்டணத்திலும் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் மார்பக புற்றுநோய் கதிரியக்க நிபுணரின்  ஆலோசனையும் வழங்கப்படுகிறது. இத்தகைய பரிசோதனை மூலம் மார்பக புற்றுநோய் உள்ளதா என்பதை கண்டறியலாம். பாதிப்பு நிலை துவக்கத்திலேயே கண்டறியப்பட்டால் மேல் சிகிச்சைகள் மேற்கொண்டு மார்பக புற்றுநோயை முழுமையாக குணப்படுத்தலாம் என்று டாக்டர் ரூபா அவர்கள் கூறினார்.

மேலும் விபரங்களுக்கும், பரிசோதனைக்கான முன்பதிவிற்கும், மார்பக புற்றுநோய் கதிரியக்க நிபுணர் டாக்டர் ரூபா, கே.எம்.சி. ஹெச்.மருத்துவமனை, அவினாசி ரோடு, கோவை, போன் :  97901 97971,  0422 4324151, , இ-மெயில் : drrupa@kmchhospitals.com ஆகியவற்றிலும் தொடர்பு கொள்ளலாம்.