ஸ்ரீ  ராமகிருஷ்ணா  கல்லூரியில்  சினாரியோ  2019 கலை  விழா

கோவை  ஸ்ரீ  ராமகிருஷ்ணா  கலை   அறிவியல்  கல்லூரியில் சினாரியோ 2019 என்னும்  கலாச்சார  கலை  விழா  சிறப்பாக  நடைபெற்றது.  இவ்விழாவினை கல்லூரி  முதல்வர்  மற்றும்  செயலர்  கு.கருணாகரன்  குத்து விளக்கு  ஏற்றி தலைமை  ஏற்றார்  இவ்விழாவில்  துணை  முதல்வர்  சு.தீனா  அவர்கள்  வாழ்த்துரை  வழங்கினார்.  இவ்விழாவில்  மாநில  அளவில் 45 க்கு  மேற்பட்ட  கல்லூரிகள்  கலந்து  கொண்டனர். இதில் பல்வேறு  போட்டிகள்  நடைபெற்றது. இதில்  கலந்து கொண்டு  மாணவர்கள் தங்களின்  திறமைகளை  வெளிப்படுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில்  சின்னத்திரை  மற்றும் திரைப்படத்  துறை  சார்ந்த  நட்சத்திரங்கள் கலந்து  கொண்டு  மாணவர்களை உற்சாகப்படுத்தினார்கள்.  இவ்விழாவினை மாணவர்  மன்ற  ஒருங்கிணைப்பாளர்  ஆர்.கீதா கவின்  கலை மன்ற ஒருங்கிணைப்பாளர்  த.விஸ்வநாதன்  இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை  சிறப்பாக  செய்திருந்தனர்.