டாக்டர் என்.ஜி.பி. தொழில் நுட்பக் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து விழா

 

டாக்டர் என்.ஜி.பி. தொழில் நுட்பக் கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையானது, கமுகா கிரீன் டெக் ஏவியேஷன் லிமிடெட், மியூல் கிராஃப்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட், மற்றும் ஹெபிசெக் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய மூன்று தொழில்நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமானது தொழில்துறையினர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால்களை பரஸ்பரம் ஒத்துழைத்து தீர்ப்பதாகும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வெளிப்பாடானது தொழில்துறை தரநிலைகள் மற்றும் மென்பொருள் துறைகளின் எதிர்பார்ப்புகள் பற்றிய புரிதலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தமானது டாக்டர் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரி செயலாளர் டாக்டர். தவமணி பழனிசாமி மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகனால் கையெழுத்து இடப்பட்டது. இதில் கல்லூரியின் தலைமைச் செயல் அலுவலர் முனைவர். எம். நடேசன். முதல்வர் முனைவர். எஸ்.யு. பிரபா, துறை தலைவர் முனைவர் து பழனிக்குமார் மற்றும் கணினி அறிவியல் பொறியியல் துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.