தமிழ்நாட்டுக்கு எம்.ஜி. ராமச்சந்திரன்; கோவைக்கு சிங்கை ராமச்சந்திரன் -பிரேமலதா விஜயகாந்த்,பொதுச்செயலாளர்,தே.மு.தி.க.

கோவை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ஜி ராமச்சந்திரனை ஆதரித்து தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளைக் கேட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில், ‘அனைத்து தரப்பு மக்களும் ஆதரிக்கின்ற வெற்றி கூட்டணியின் வேட்பாளராகக் கோவை தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன்  அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றியை  இந்த தேர்தலில் தர வேண்டும். இந்தக் கூட்டணி மாபெரும் வெற்றிக் கூட்டணி மேலும் புரட்சித்தலைவரின் பெயரை வேட்பாளரும் பெற்றுள்ளார். அவரைப் போலவே மிகப்பெரிய வெற்றியைப் பெற்று புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி, புரட்சிக்கலைஞர் ஆகியோரது பாதத்தில் வெற்றியைச் சமர்ப்பிப்போம்.

கோவையில் உள்ள பெரும்பாலான மில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. கோவை மக்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காரணம் என்ன? நீங்கள் சிந்திக்க வேண்டும். தற்பொழுது இருக்கின்ற திமுகவும் சரி. அவர்களின் பினாமிகளும் சரி அனைத்து ஆலைகளையும் விலைக்கு வாங்கி கட்டிடங்களாக மாற்றி வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் மத்தியில் மோடி ஆட்சியில் ஜி.எஸ். டி கொண்டு வந்த பிறகு அனைத்து மில்களும் மூடப்பட்டு சிறு, குறு தொழில் கள் உள்பட அனைத்தும் தொழில்களும் பாதிக்கப் பட்டுள்ளது. மின்கட்டண உயர்வால் அனைத்து தொழில்களும் நலிவடைந்து விட்டது’’என்று பேசினார்.