நேசனல் மாடல் பள்ளியில் உயர்கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சி

நேசனல் மாடல் பள்ளி குழுமம் சார்பில் “கேரியர் பாத்” எனும் தலைப்பில் உயர்கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் 9, 10, 11, 12 மாணவ, மாணவிகள் பள்ளி படிப்பை முடித்த பிறகு எந்தெந்த படிப்புகளை தேர்ந்தெடுப்பது என்பது குறித்த கல்வி நிறுவனங்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அந்த வகையில் நேரு ஏரோநாட்டிக்கல் கல்லூரி, கற்பகம் கல்வி நிறுவனம், கே.சி.டி உள்ளிட்ட 22க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் இதில் பங்கேற்றன.

நிகழ்விற்கு நேஷனல் மாடல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நேஷனல் மாடல் சிபிஎஸ்இ உள்ளிட்ட பள்ளிகளில் இருந்து 2000- திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் நேஷனல் மாடல் பள்ளிக் குழுமத்தின் தலைவர் மோகன் சந்தர், செயலாளர் உமா மோகன் சந்தர் , பள்ளி முதல்வர்கள் பேபி, கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.