அம்ருதாஞ்சன் ஹெல்த்கேரின் புதிய எலக்ட்ரோ+  அறிமுகம்

உடல்நல பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்  துறையில் புகழ்பெற்ற நிறுவனமான அம்ருதாஞ்சன் ஹெல்த்கேர், அதன் தயாரிப்பு வரிசையில் சமீபத்திய சேர்க்கையான, ஆற்றல் அளவை நிரப்பவும், நீரிழப்பு  மற்றும் சோர்வுக்கு எதிராக போராடவும் வடிவமைக்கப்பட்ட ஒரு எலக்ட்ரோலைட் பானமான எலக்ட்ரோ+ இன் குறைந்த சர்க்கரை மாறுபாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அறிமுகத்துடன் இணைந்து, இந்திய கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ஐ எலக்ட்ரோ+ க்கான பிராண்ட் தூதராக அம்ருதாஞ்சன் அறிவிக்கிறது.

எலெக்ட்ரோ+ ஆனது, ஆற்றலை மீட்டெடுக்கவும் சோர்வை எதிர்த்துப் போராடவும் அவசியமான பயனுள்ள அணு -நிலை நீரேற்றம் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளை நிரப்புவதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. சர்க்கரை சேர்க்காத புத்துணர்ச்சியூட்டும் பான விருப்பத்தை வழங்குகின்ற ஒரு குறைந்த சர்க்கரை மாறுபாட்டின் இந்த அறிமுகத்தின் மூலம் எலெக்ட்+ சுகாதார உணர்வுள்ள நுகர்வோருக்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கிறது. எலக்ட்ரோ+இன் குறைந்த சர்க்கரை வகையின் இந்த வெளியீடு, இந்திய கிரிக்கெட்டில் ஒரு வளர்ந்து வரும் நட்சத்திரமான ருதுராஜ் கெய்க்வாட் உடன் அம்ருதாஞ்சனின் கூட்டுறவு மூலம் ஒத்துப்போகிறது.

ருதுராஜ் இன்  விளையாட்டின் மீதான அர்ப்பணிப்பும், உச்ச செயல்திறனைப் பராமரிப்பதில் உள்ள அர்ப்பணிப்பும், உடல்நலம் மற்றும் உயிர்ச்சக்தியை மேம்படுத்தும் எலக்ட்ரோ+ இன் முக்கிய மதிப்புகளுடன் சரியாக ஒத்துப்போகின்றன. பிராண்ட் தூதராக, ருதுராஜ் கெய்க்வாட், எலக்ட்ரோ+ இன் நன்மைகளை வெளிப்படுத்துவதிலும், ஒட்டுமொத்த நலனுக்காக நீரேற்றம் மற்றும் எலக்ட்ரோலைட் சமநிலைக்கு முன்னுரிமை அளிக்க நுகர்வோரை ஊக்குவிப்பதிலும் முக்கிய பங்கு வகிப்பார்.

இந்த விளம்பரம், ருதுராஜ் கெய்க்வாட் கிரிக்கெட் மைதானத்தில் செயலில் இருப்பதையும், பான இடைவேளையின் போது களைப்பாக காணப்படுவதையும், புத்துயிர் பெற வேண்டிய தேவையுடன் இருப்பதையும் காட்டுகிறது. வெறும் ஒரு சாதாரண பானத்தை விட அவரது தேவை, ஆற்றலை மீட்டெடுப்பதிலும், செல்லுலார் மட்டத்தில்  மறுநீரேற்றம் செய்வதிலும்  எலக்ட்ரோ+ இன் செயல்திறனை முக்கியப்படுத்திக் காட்டுகிறது.  சோர்வை எதிர்த்துப் போராடுவதற்கும் உயிர்ச்சக்தியை மீட்டெடுப்பதற்கும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை வழிநடத்தும் நபர்களுக்கு ஒரு இன்றியமையாத துணையாக அமைக்கின்ற எலக்ட்ரோ+ இன் முக்கியத்துவத்தை இந்த வீடியோ வலியுறுத்துகிறது.

அம்ருதாஞ்சன் ஹெல்த் கேர் லிமிடெட் இன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சம்பு பிரசாத், எலக்ட்ரோ+ இன் குறைந்த சர்க்கரை வகையை அறிமுகப்படுதத்துவதிலும் ருதுராஜ் கெய்க்வாட் உடனான கூட்டு செயல்பாட்டிற்கும்  தனது உற்சாகத்தை வெளிப்படுத்தி கூறும்பொழுது “அம்ருதாஞ்சனில், ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தும் புதுமையான தீர்வுகளை வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். எலக்ட்ரோ+இன் குறைந்த சர்க்கரை வகையின் இந்த அறிமுகம், எங்கள் நுகர்வோரின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் எங்களின் அர்ப்பணிப்பை முக்கியப்படுத்திக் காட்டுகிறது. அம்ருதாஞ்சன் குடும்பத்திற்கு ருதுராஜ் கெய்க்வாட் ஐ  வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் எலக்ட்ரோ+ உடனான அவரது தொடர்பு இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்களிடையே எதிரொலிக்கும் என்று நம்புகிறோம்.”என்றார்.

இந்த கூட்டாண்மை குறித்து  ருதுராஜ் கெய்க்வாட் கருத்துத் தெரிவிக்கையில், “அம்ருதாஞ்சன் ஹெல்த்கேர் நிறுவனத்துடன் அவர்கள் எலக்ட்ரோ+ பிராண்டிற்காக கூட்டுசேர்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீர்ச்சத்து மற்றும் ஆற்றல் பராமரிப்பு என்னைப் போன்ற விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமல்ல, அவர்களின் அன்றாட நடவடிக்கைகளில் அனைவருக்கும் முக்கியமானதாக இருக்கிறது. ஒருவர் களத்தில் இறங்கியிருந்தாலும் அல்லது தினசரி பணிகளை நிர்வகிப்பவராக இருந்தாலும், உச்ச செயல்திறன் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு போதுமான எலக்ட்ரோலைட் சமநிலையை உறுதி செய்வது அவசியமாக இருக்கிறது. அதற்காக அம்ருதாஞ்சன் எலக்ட்ரோ + மூலம் நாம் ஒரு தீர்வைக் கொண்டிருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறினார்.