ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கல்லூரியில் டெக்னோ ஃபீஸ்ட் 2024

ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை சம்பாக தேசிய அளவிலான கல்லூர்களுக்கிடையில் டெக்னோ ஃபீஸ்ட் 2024 பைரேட்ஸ் ஆஃப் காம் பீனிக்ஸ் பகுதியை விழா அண்மையில் நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக நடன கலைஞர் மற்றும் பாடகர் செல்வி. சிவாலி அரோரா அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களிடம் வாய்ப்புகள் வரும் பொழுது அவற்றைப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும், இன்றைய காலகட்டத்தில் கலைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. கல்வியைப் போலவே அவற்றையும் கற்றுக் கொள்ளுதல் இன்றியமையாதது என்று சிறப்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் போ.சுப்பிரமணி அவர்கள் தலைமையேற்று போட்டிகள் நடத்துவதன் நோக்கமே மாணவர்களிடம் உள்ள திறமைகளை வளர்ப்பதற்காகவே என்று கூறி மாணவர்கள் தொழில்நுட்பம் மற்றும் கலைகளில் ஆர்வத்துடன் பங்கேற்றமைக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இவ்விழாவில் மாணவர்களுக்கு தொழில்நுட்ப போட்டிகள் முதல் கலைப்போட்டிகள் வரை நடைபெற்றன. இவ்விழாப் போட்டிகளில் 825 பிற கல்லூரி மாணவர்கள் மற்றும் எஸ்.என்.எம்.வி கல்லூரி மாணவர்கள் பங்கேற்று தன் திறமைகளை வெளிப்படுத்தினர். இவ்விழாவினை வணிகப்புலத் தலைவர் முனைவர் வே.பத்மநாபன் அவர்கள் ஒருங்கிணைத்தார். மேலும் இவ்விழாவில் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் கலந்துகொண்டனர்.