கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளி வெற்றி

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில்  பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது.

14 வயதிற்கு உட்பட்டவர்கள் விளையாடக்கூடிய இப்போட்டியில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு பள்ளிகளின் மாணவர்கள் இதில் பங்கேற்றன. இதன் இறுதி போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி 160 ரன் வித்தியாசத்தில்  மேட்டுப்பாளையத்தில் உள்ள எஸ்.எஸ்.வி.எம். பள்ளியை வீழ்த்தி கோப்பையை வென்றது.