மூன்று தங்கம் வென்று இந்துஸ்தான் பள்ளி மாணவர் அசத்தல்

கோவை இந்துஸ்தான் பள்ளியைச் சார்ந்த மாணவர் சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டியில்  மூன்று தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நீச்சல் குளத்தில் நடைபெற்ற இப்போட்டியில் கோவை இந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் கபிலன் 14  வயதுக்குட்பட்ட  பிரிவில் பங்கேற்றார் .

இதில் 50 மீ பேக் ஸ்ட்ரோக் ,100 மீ பேக் ஸ்ட்ரோக் மற்றும் 200 மீ ப்ரீ ஸ்டைல் ஆகிய மூன்று போட்டிகளில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். வெற்றி பெற்ற மாணவருக்கு  இந்துஸ்தான் கல்வி நிறுவன தாளாளர் சரஸ்வதி கண்ணையன்,செயலர் பிரியா சதீஸ் பிரபு, பள்ளி முதல்வர் செண்பக வல்லி  ஆகியோர் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.