ஸ்கோடா  ஆட்டோ இந்தியாவின் புதிய கார்  அறிமுகம்

இரண்டே ஆண்டுகளில் ஒரு இலட்சம் என்னும் விற்பனை இலக்கை எட்டிய பிறகு, ஸ்கோடா ஆட்டோ இந்தியா அதன் முதல் தயாரிப்பு நடவடிக்கையாக, அதிக விற்பனையாகும், ஐந்து நட்சத்திர பாதுகாப்பான, கிராஷ்-டெஸ்ட் செடானின், ஸ்லேவியா ஸ்டைல் எடிஷனை அறிமுகப்படுத்தி உள்ளது.

இது குறித்து ஸ்கோடா ஆட்டோ இந்தியா பிராண்ட் இயக்குநர் பீட்டர் ஜெனேபா கூறுகையில் ‘ஸ்லேவியா ஸ்டைல் எடிஷன், எங்கள் பெருமைமிகு வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் விருப்பத்திற்கு இணங்க, மிகவும் பிரத்தியேகமான, அதிக மதிப்புள்ள பொருளை நாங்கள் வழங்குவதற்கான மற்றுமொரு எடுத்துக்காட்டு ஆகும். குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்கள் மீது கவனம் செலுத்தி அவர்களுக்கான மிகவும் குறைந்த எண்ணிக்கையில் லிமிடெட் எடிஷனாக அறிமுகப்படுத்துகிறோம். ஆனாலும், இந்தியா முழுவதும் 200+ விற்பனை டச் பாயிண்ட்களில் லிமிடெட் எடிஷன் கிடைக்கும்’ என்றார்.

ஸ்லேவியாவின் ஸ்டைல் வேரியண்ட் டாப்-ஆஃப்-தி-லைன் அடிப்படையில், ட்யூயல் டேஷ் கேமரா உள்ளிட்ட சிறப்பு அம்சங்களுடன் ஸ்டைல் எடிஷன் அறிமுகமாகிறது. பிளாக்ட் அவுட் பி-பில்லர்கள், பிளாக் கண்ணாடி கவர்கள், பிளாக் ரூஃப் ஃபாயில் ஆகியவற்றின் மீது ’எடிஷன்‘ பேட்ஜ் பொறிக்கப்பட்டிருக்கும். மகிழுந்துக்குள் ‘ஸ்லேவியா‘ பிராண்டெட் ஸ்கஃப் பிளேட் ஸ்டீரிங்கில் ‘எடிஷன்‘ பேட்ஜ் காணலாம்.

அனைத்து 500 அலகுகளிலும் 1.5 டிஎஸ்ஐ எஞ்சின் திறனில் இயங்கும் 7 ஸ்பீட் டிஎஸ்ஜி ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.  ஸ்லேவியா கூரை அல்லது ஓஆர்விஎம்-களின் மேலுள்ள பிரத்யேக கருப்பு அம்சங்களுக்கு மாறுபாடாக இவ்வண்ணங்கள் பிரத்தியேகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. தனித்துவம் மற்றும் கூடுதல் அம்சங்களைக் கொண்ட இந்த எடிஷன் அனைவருக்கும் ஏற்ற வகையில், ஸ்லேவியா செடான் ஸ்டைல் வேரியண்டுக்கு இணையான விலையை விடவும்,  ரூ 30,000/- மட்டுமே கூடுதலாகும்.

ஸ்லேவியா பாதுகாப்பு பாரம்பரியத்தை ஸ்லேவியா ஸ்டைல் எடிஷனும் முன்னெடுத்துச் செல்கிறது. கடுமையான பரிசோதனைக்கு உட்பட்டு, உயர்தரமான 6 ஏர்பேக், குளோபல் என்சிஏபியின் கீழ் பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும், முழுமையான 5 நட்சத்திர தர மதிப்பீடு  வழங்கப்பட்டுள்ளது.

குஷாக் எஸ்யுவி போன்று ஸ்லேவியா சேடன் வாகனமும் எம்க்யூபி-ஏஓ-ஐஎன் தளத்தில் இந்தியச் சந்தைக்கெனப் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டதாகும். குறைந்த பராமரிப்புச் செலவுகள், அதிக உள்ளூர்மயமாக்கல், விரைவான சேவை மற்றும் உடனடித் தேவைக்கு உதிரிபாகங்கள் ஆகியவற்றுடன் ஸ்கோடா டிஎன் ஏ-வின் பாரம்பரிய குணங்களான டிரைவிங்க் டைனமிக்ஸ் மற்றும் பாதுகாப்பு அம்சங்களைத் தக்க வைத்துக் கொண்டு, இந்தியா மற்றும் செக் நாடுகளின் குழுக்கள் இத்தளத்தைக் கூட்டாக வடிவமைத்துள்ளன.

95% உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்ட இந்த கார் 4 ஆண்டுகள் அல்லது 100,000 கிமீ நிலையான உத்தரவாதம் மற்றும் 8 ஆண்டுகள் அல்லது 150,000 கிமீ வரை விருப்ப உத்தரவாதம் வழங்கியுள்ளது. ஸ்லேவியா ஸ்டைல் எடிஷன் 1.5 டிஎஸ்ஐ டிஎஸ்ஜி மாடல் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ 19,13,400/-ஆகும்