துபாயில்  புதிதாக மேக்ஸ் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம்

வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் பிராந்தியத்தை அடிப்படையாகக் கொண்ட தனது வாடிக்கையாளர்களுக்கு விரைவான, திறமையான சேவைகளை வழங்கும் விதமாக மேக்ஸ் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் தனது  அலுவலகத்தைத் துபாயில் திறந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் திறக்கப்படும் இந்நிறுவனத்தின் முதல் அலுவலகம் இதுவாகும். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள வாடிக்கையாளர்களின் தேவைகள் என்னென்ன அவற்றை எவ்வாறு பூர்த்தி செய்ய முடியும் என்பது குறித்தும் இந்த அலுவலக மதிப்பீடு செய்ய உள்ளது.

இங்குள்ள வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாகவும் இப்பிராந்தியத்தில் தனது செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் விதமாகவும் இந்த அலுவலகத்தை மேக்ஸ் லைப் திறந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு எவ்வாறு சிறப்பான சேவையை மேக்ஸ் லைப் வழங்கி வருகிறதோ அதேபோன்ற சேவையை இங்குள்ள வாடிக்கையாளர்களுக்கும் வழங்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.

புதிய அலுவலகம் திறப்பு குறித்து மேக்ஸ் லைப் தலைமை செயல் அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான பிரசாந்த் திரிபாதி கூறுகையில், மத்திய கிழக்கு நாடுகளில் எங்களது முதல் பிரதிநிதி அலுவலகத்தைத் திறப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இது எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் நிதி மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்கு ஏற்ப ஆயுள் காப்பீட்டு விழிப்புணர்வை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம். துபாயில் எங்கள் அலுவலகம் திறக்கப்பட்டு இருப்பதன் மூலம், நாங்கள் வளைகுடா பகுதிகளுக்கு எங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்துகிறோம்.  எங்கள் பிராண்ட் விழிப்புணர்வை மேம்படுத்துகிறோம். ஆனால் அதேசமயம் எங்கள் வெளிநாட்டு வாழ் இந்திய வாடிக்கையாளர்கள் தங்கள் வாழ்க்கை இலக்குகளை அடைவதற்கு உறுதி அளிக்கும் வகையில் இதுபோன்ற அலுவலகங்களைத் திறந்து அவர்களுக்கும் எங்களுக்குமான இடைவெளியைக் குறைக்கிறோம் என்று தெரிவித்தார்.

மேக்ஸ் லைப் நிறுவனம் துவங்கிய நாள் முதல் இன்று வரை தனக்கென ஒரு சிறப்பான இடத்தை தக்க வைத்துள்ளது. 5 வருடக் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகித அடிப்படையில் இந்நிறுவனத்தின் தனிப்பட்ட புதிய வர்த்தக வளர்ச்சி விகிதம் 13 சதவீதமாக உள்ளது. நிர்வாகத்தின் கீழ் உள்ள நிறுவனத்தின் சொத்தானது 1.23 லட்சம் கோடியாகவும், கடந்த ஐந்து ஆண்டுகளில் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகித அடிப்படையில் 19 சதவீதம் அதிகரித்துள்ளது. வாடிக்கையாளர்களின் நம்பிக்கை மிகுந்த நிறுவனமாக விளங்கி வரும் இந்நிறுவனம் கடந்த 2023-ம் நிதி ஆண்டில் பெறப்பட்ட உரிமைகோரல்களில் 99.51 சதவீத உரிமைகோரல்களுக்குப் பணம் வழங்கியுள்ளது. மரணமடைந்தவர் குடும்பத்தின் உரிமைகோரல்கள் எந்தவித தொந்தரவும் இல்லாத வகையில் முன்னுரிமை அளித்து அவற்றுக்கு இந்நிறுவனம் தீர்வு கண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.