இந்துஸ்தான் கலை கல்லூரியில் பொங்கல் விழா

பொங்கல் விழாவினை முன்னிட்டு, இந்துஸ்தான் காலை மற்றும் அறிவியல் கல்லூரி  வளாகத்தில் பல்வேறு போட்டிகளை நிகழ்த்தி  மாணவர்கள் பொங்கல் விழாவினை கொண்டாடி மகிழ்ந்தனர். கோலப்போட்டி ,கயிறு இழுக்கும் போட்டி போன்ற உற்சாகமான பாரம்பரிய விளையாட்டுகளில் மாணவர்கள் கலந்து கொண்டு தமது பங்களிப்பை நல்கி பாரம்பரிய திருவிழாவினைக் திறம்படக் கல்லூரி வளாகத்தில் கொண்டாடி மகிழ்ந்தனர்.

பொங்கல் திருவிழாவினை கல்லூரியின் நிர்வாக அறங்காவலர்  சரஸ்வதி கண்ணையன்  கல்லூரியின் செயலர்  கே .பிரியா,  கல்லூரியின் முதல்வர் பொன்னுசாமி உள்ளிட்டோர்   துவக்கி வைத்தனர்.

உணவு மற்றும் விடுதி மேலாண்மைத் துறை சார்பில் குறைந்தபட்சம் 75 நிமிடங்களில் இத்துறையின் 75 மாணவர்களைக் கொண்டு சிறுதானியம் சார்ந்த பொங்கல் உணவுகளைச் சமைத்து புதிய உலக சாதனை படைத்துள்ளது. கலாம்ஸ் உலக சாதனையால் அங்கீகரிக்கப்பட்ட புதிய உலக சாதனையை உருவாக்க மொத்தம் 150 சிறுதானியப் பொங்கல் வகைகள் சமைக்கப்பட்டன. கதம்ப சாமைப் பொங்கல், அக்கரவடிசல் பொங்கல், தேங்காய்ப்பால் கருப்பட்டி பொங்கல், உக்கரை குதிரைவாலி பொங்கல், வல்லாரை சோலை பொங்கல், எலுமிச்சை புல் பொங்கல், கற்பூரவல்லி பொங்கல், கொய்யா வரகு பொங்கல், வெற்றிலை கம்பு பொங்கல், நெய் பனிவரகு பொங்கல், பருத்திப்பால் திணைப் பொங்கல் ஆகியவை பார்வையாளர்களால் வெகுவாக கவரப்பட்டது. ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியை உணவு மற்றும் ஹோட்டல் மேலாண்மைத் துறைத் தலைவர் பிரேம்கண்ணா தலைமையில் துறை ஒருங்கிணைப்பாளர் செஃப். ஏ. செபாஸ்டியன் ஷால்வின், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களால் மேற்பார்வையிடப்பட்டது.