இந்துஸ்தான்  கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்

இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் 1சூரியன், இயற்கை அன்னை மற்றும் வளமான அறுவடைக்கு உதவும் பல்வேறு பண்ணை விலங்குகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

விழாவை நினைவு கூறும் வகையில் மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் பல்வேறு துறைத் தலைவர்கள் பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொண்டனர்.

கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்ப் புலவர் திருவள்ளுவர் உருவச்சிலையின் முன்பாக உற்சாகத்துடன் பொங்கல் செய்து வழிபட்டனர்.  கல்லூரி தலைமை செயல் அதிகாரி  கே.கருணாகரன்,  மற்றும்  பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் ஜெயா ஆகியோர் விழாவை வாழ்த்தி தமிழர் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

கல்லூரி முதல்வர் தனது உரையில் கடந்த ஆண்டுகளில் நமது கல்லூரி  பெற்ற வெற்றிகளுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு  வாழ்த்து தெரிவித்தார். மேலும் வரும் ஆண்டுகளிலும் சிறப்பான வெற்றிகளை அடைய உத்வேகத்துடன் செயல்படுவோம் என்று தெரிவித்தார். மாணவ, மாணவியர்களுக்குப் பாரம்பரிய விளையாட்டு மற்றும் போட்டிகள்  நடத்தப்பட்டன.

மேலும், இந்துஸ்தான் கல்வி குழுமங்களின் அறங்காவலர் சரசுவதி கண்ணையன், இணைச் செயலாளர் பிரியா சதிஷ் பிரபு ஆகியோர் மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்குப் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.