#அறிந்து கொள்வோம் பறக்க இயலாத 6 பறவை இனங்கள்

உலகில் சில பறவை இனங்கள்  பறப்பதைத் தவிர்க்கும் வகையில்  உருவாகியுள்ளன. இவை குறிப்பிட்ட பகுதிகள் மற்றும் வாழ்விடங்களில் மட்டுமே காண முடியும். அத்தகைய பறக்க இயலாத 6 அறிந்த பறவைகள் குறித்து இங்கே காணலாம்.

  • தீக்கோழி

தீக்கோழி | ரெஜோலன் பக்கம்

உலகின் மிகப்பெரிய பறவைகளில் ஒன்றான தீக்கோழிகள் தனது பெரிய இறக்கைகளுடன்  அழகாகக் காட்சியளிக்கிறது. ஆனால் இவற்றின் அதிக உடல் எடை காரணமாக அவர்களால் பறக்க முடியாது.

  • ஈமு Emu - The Australian Museum

தீக்கோழியைப் போலவே ஈமுக்களும் ஓடுவதற்கு நீண்ட கால்களைக் கொண்டுள்ளன. ஆனால், அவற்றின்  குறுகிய இறக்கைகள் மற்றும் கனமான உடல் காரணமாக, ஈமுக்களால் பறக்க முடியாது.

  • காசோவரி

காசோவரி பறவை * பறவைகள்

தீக்கோழி மற்றும் ஈமுவுக்குப் பிறகு காசோவரி மூன்றாவது உயரமான பறவையாகும். இவற்றின் தலையில் இருக்கும் கொம்பு போன்ற வளர்ச்சி, வேட்டையாடுபவர்களிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள பயன்படுத்துகின்றன.

ஆஸ்திரேலியா மற்றும் நியூ கினியா காடுகளில் காணப்படும், இவை சுமார் 48 கி.மீ. வேகத்தில் ஓட கூடியவை.  அவற்றின் பருமனான உடல்கள் மற்றும் வேகமாக இயங்கும் திறன் இருந்தபோதிலும், காசோவரியால் பறக்க இயலாது.

  • ரியா

Greater Rhea | National Geographicரியாஸ் பறவையானது தனது தோற்றத்தில்  தீக்கோழியைப் போலவே ஒத்திருக்கிறது. அதே போல் மிகவும் வலுவான கால்கள் மற்றும் வேகமாக  இயங்கும் திறனைக் கொண்டுள்ளது. ஆனால், அவர்களின் அதிக உடல் எடை காரணமாக, ரியாஸால் பறக்க முடியாது.

  • ககபோ

In New Zealand the bird of 2020 was chosen: it is the world's largest  parrot - kakapo.. Full credits to u/ DurovCode | Kakapo, Flightless parrot,  Pet birdsககபோஸின் தோற்றம் பாதி ஆந்தை மற்றும் பாதி கிளி போல காட்சியளிக்கும், ஆனால் அவற்றைப் போல, ககபோஸினால் பறக்க முடியாது. இந்த ககபோஸும் அழிந்து வரும் பறவை இனங்களில் ஒன்றாகும்.

  •  கிவி 

கிவி பறவையின் சிறப்பம்சங்கள் எவை? - Quoraநியூசிலாந்தைப் பூர்வீகமாகக் கொண்ட கிவி  ஓர் அழகான சிறிய பறவை இனமாகும். கிவியின் உடல் சிறிய தடிமனான இறகுகளால் மூடப்பட்டு இருப்பதால் அவை பறக்க முடியாது.

மேற்காணும்,  பறக்க முடியாத பறவைகளால் தனது இறக்கைகளுடன் பறக்க முடியாது என்றாலும், அவை நிலத்தில் உயிர்வாழ உதவும் பண்புகளை உருவாக்கியுள்ளன. சிலர் நன்றாக மறைக்க முடியும், சிலர் மிக வேகமாக ஓட கூடிய திறனையும் கொண்டுள்ளன.