ஆழ் கடல் குழாயில் ‘வாயு கசிவு’ – சென்னை மக்கள் ‘அவதி’

சென்னை, எண்ணூர் – பெரிய குப்பம் பகுதியில் இயங்கி வரும் தொழிற்சாலையில் டிசம்பர் 26 ஆம் தேதி இரவு வாயு கசிவு ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், 100 -க்கும் மேற்பட்ட மக்களுக்கு மூச்சுத் திணறல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறிப் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அம்மோனியா வாயு ஏற்றிய கப்பலில் இருந்து குழாயில் வழியாகத் தொழிற்சாலைக்குச் செல்லும் போது குழாயில் கசிவு ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய முதற்கட்ட ஆய்வில் தொழிற்சாலை வாயிலில் 400 மைக்ரோ கிராம இருக்க வேண்டிய அம்மோனியா 2,090 மைக்ரோ கிராமாக இருந்தது என்றும், கடல் நீரிலிருந்திருக்க 5. மில்லி கிராம் இருக்க வேண்டிய அம்மோனியா அளவு லிட்டருக்கு 49 மில்லி கிராம் ஆக இருந்து என்று ஆய்வுக்காக எடுக்கப்பட்ட மாதிரியில் தெரிய வந்துள்ளது.