ஆம்வே இந்தியாவின் பிராண்ட் தூதராக மல்யுத்த வீரர் சங்க்ராம் சிங் நியமனம்

எஃப்.எம்.சி.ஜி நேரடி விற்பனை நிறுவனங்களில் ஒன்றான ஆம்வே இந்தியா, ஆரோக்கியம் மற்றும் உடல்தகுதி சமுதாயத்தை உருவாக்கும் திட்டங்களைத் தொடங்கியுள்ளது.

இதற்காக ஆம்வே இந்தியாவின் பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டுள்ள மல்யுத்த வீரரான சங்கராம் சிங், இந்திய இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் உடற்தகுதி மற்றும் ஆரோக்கியம் சார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதை வலியுறுத்துவது பற்றிய விழிப்புணர்வை இந்தியா முழுவதும் முன்னெடுத்துச் செல்வார்.

ஆம்வே இந்தியாவின் சிஎம்ஓ-வான அஜய் கன்னா இந்த முன்முயற்சியைப் பற்றி கருத்துத் தெரிவிக்கும்போது, இந்திய இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் இன்று நோய்த்தடுப்போடு கூடிய ஆரோக்கியமே முதன்மையானது ஆகும்.

மாறிவரும் வாழ்க்கை முறைகள், நீண்ட காலமாக வீட்டுக்குள்ளேயே இருப்பது மற்றும் பிற கட்டுப்பாடுகள் நுகர்வோரின் மன மற்றும் உடல் நலனை மோசமாகப் பாதித்துள்ளன. எங்களுடைய நல்வாழ்க்கை முன்முயற்சிகள் மூலம், ஒருவருக்குத் தேவைப்படும் தினசரி ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான கூடுதல் உணவுப் பொருட்களோடு கூடிய சரியான ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்று வருகிறோம் என்றார்.

இது குறித்து சங்க்ராம் சிங் கூறுகையில்: முழுமையான நலவாழ்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ஆம்வே போன்ற பிராண்டுடன் இணைந்திருப்பதில் பெருமையடைகிறேன். என் வாழ்க்கை முறை மற்றும் ஊட்டச்சத்து மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கிய வாழ்க்கைக்கான அணுகுமுறையுடன் ஆம்வே இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை முழுமையாக ஒத்துப்போகிறது.

உடல்தகுதியுடனும் ஆரோக்கியமாக இருப்பது பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் முயற்சியை ஆதரிப்பதற்காக நாடு முழுவதும் இந்த ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வு முன்முயற்சிகளில் நான் தீவிரமாகப் பங்கேற்றுள்ளேன் என்றார்.