தமிழ்நாடு வேளாண் பல்கலையில் முதுநிலை மாணவர் சேர்க்கை துவக்கம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2022-23 ஆண்டிற்க்கான முதுநிலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முதுநிலை பட்டமேற்படிப்பு பயிலகம் வாயிலாக 8 கல்வி வளாகங்களில் 32 துறைகளில் முதுகலைப் படிப்பையும், 28 துறைகளில் முனைவர் பட்டப் படிப்பையும் வழங்குகிறது.

2022-23 ஆம் கல்வி ஆண்டிற்கான முதுகலை மற்றும் முனைவர் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை செயல்முறை இன்று முதல் தொடங்குகிறது. விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இணையவழி சேவையை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி தொடங்கி வைத்தார்.

இவ்வாண்டு மாணவர் சேர்க்கைக்கு https://admissionsatpgschool.tnau.ac.in/ என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 27 தொடங்கி ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை மட்டுமே விண்ணப்பதாரர்கள் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம்.

இளநிலை/முதுநிலை (B.Sc / M.Sc/M.Tech) முடித்த மாணவர்கள் பட்டப்படிப்பு சான்றிதழ் (Provisional Degree Certificate) மூலமாகவும், தற்பொழுது இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் பல்கலைக்கழக பதிவாளர் (அ) கல்லூரி முதல்வர்களிடம் பெற்ற படிப்பு முடிவுற்ற சான்றிதழ் (Course Completion Certificate) மூலமாகவும், விண்ணப்பிக்கலாம். எனினும் பட்டப்படிப்பு சான்றிதழைச் சமர்பித்த பின்னரே மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்படும்,

மாணவர் சேர்க்கை தொடர்பான ஐயப்பாடுகளுக்கு gadmission@tnau.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்அஞ்சல் அனுப்பலாம்.

நேரடியாக தொடர்பு கொள்ள 9489056710 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.