மாணவர்கள் ஆராய்ச்சி திறனை வளர்க்க வேண்டும்!

டாக்டர்.ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு அமைப்பின் சார்பாக மாணவர் திறன் மேம்பாட்டு நிகழ்வு நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் ரூபா தலைமை ஏற்று தலைமை உரையாற்றினார். கோவை, எடு பிரிட்ஜ டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மேலாளர் மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சியாளர் அருண்பாரதி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ‘நிறுவனங்களும், வேலை வாய்ப்புகளும் ‘ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

அவர் பேசிய உரையில், கல்வி கற்கும் மாணவர்கள் தங்கள் கூடுதல் தகுதிகளை வளர்த்துக்கொள்ள கணினி மொழி சார்ந்த பைத்தான், ஜாவா போன்ற கூடுதல் படிப்புகளை படிக்க வேண்டும். தொழில்துறையில் தங்களை மேம்படுத்திக்கொள்ள சுய ஆர்வம் அவசியம். நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு டிஜிட்டல் முறையில் விண்ணப்பங்களை தயார் செய்ய வேண்டும்.

நல்ல புத்தகங்களை படித்து மொழிப்புலமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்‌‌. இதனால் தன்னம்பிக்கை வளரும். தகவல் தொழில்நுட்பத் துறையில் தங்கள் அறிவை வளர்த்துக் கொண்டால் பல்வேறு நாடுகளுக்கு சென்று பணி செய்யக் கூடிய வாய்ப்புகள் ஏற்படும். நல்ல வேலைவாய்ப்பை பெறுவதற்கு தாங்கள் படிக்கின்ற துறையில் ஆராய்ச்சி திறனை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று பல கருத்துக்களை எடுத்துரைத்தார்.