ராமகிருஷ்ணா கலை கல்லூரியில் சர்வதேச இணையவழி கருத்தரங்கம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில், சர்வதேச அளவிலான இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது.

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின், பி.காம். பி.பி.எஸ். மற்றும் ஆர்.எம். துறை சார்பில், ‘2030-ல் காப்பீட்டில் செயற்கை நுண்ணறிவின் தாக்கங்கள்’ என்ற தலைப்பில் சர்வதேச அளவிலான இணையவழி கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் கருத்தரங்கத்திற்குத் தலைமை வகித்து, சர்வதேச தரபுத்தக எண்ணுடன் தயாரிக்கப்பட்ட கருத்தரங்கு மலரை வெளியிட்டார். பி.காம். பி.பி.எஸ். மற்றும் ஆர்.எம்.துறைத் தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர் வி.பத்மநாபன் வரவேற்றுப் பேசினார்.

மாணவர் நலத்துறை டீன் ஜெ.சண்முகானந்தவடிவேல், கோயம்புத்தூர்காப்பீட்டுநிறுவன செயலர் பி.பிரசாத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்திய காப்பீட்டு நிறுவனஉறுப்பினர் சங்கரராமன் நாராயணன்,ஓமன் பல்கலைக்கழக வணிகத்துறை பேராசிரியர் நித்யாராமச்சந்திரன் ஆகியோர் கருத்தரங்க உரை நிகழ்த்தினர். அதைத்தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில், நாடுமுழுவதும் இருந்து 200-க்கும் மேற்பட்டபேராசிரியர்கள், ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர். இவர்களில் 88 பேர் ஆய்வுக்கட்டுரைச் சமர்ப்பித்தனர்.

கருத்தரங்கம் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, தலா 44 பேர்வீதம் ஆய்வுக்கட்டுரைகள் வாசித்தனர். இதன்படி‘காப்பீட்டுத்துறை வடிவமைப்பில் செயற்கை நுண்ணறிவின் பங்கு’ என்ற தலைப்பில் நடைபெற்ற முதல் அமர்வில் பெங்களூரு கிறிஸ்து பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் கார்த்திக்,பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி பி.காம். பி.பி.எஸ். துறைத் தலைவர் எஸ்.எம்.யமுனா, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி பி.காம். பி.பி.எஸ். மற்றும் ஆர்.எம். துறை உதவிப் பேராசிரியைபி.வளர்மதி ஆகியோர் அமர்வுத் தலைவர்களாக இருந்து கருத்தரங்கை நடத்தினர்.

‘காப்பீட்டுத் துறை-2030’ என்ற தலைப்பில் நடைபெற்ற இரண்டாம் அமர்வில் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் மேலாண்மைத்துறை பேராசிரியர் கே.பிரபாகர், பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரி பிபிஏ-பிபிஎம் துறைத் தலைவர் பேராசிரியை சிந்து, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி பி.காம். பி.பி.எஸ். மற்றும் ஆர்.எம். துறை உதவிப் பேராசிரியர் ஜெ.தீபக்குமார் ஆகியோர் அமர்வுத் தலைவர்களாக செயல்பட்டனர்.