மங்கலம் அமிர்த வித்யாலயம் பள்ளியில் சரஸ்வதி பூஜை

மங்கலம் அமிர்தவித்யாலயம் பள்ளியில் நவராத்திரியை முன்னிட்டு சரஸ்வதி பூஜை புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இவ்விழாவானது குத்து விளக்கினை ஏற்றி இறை வழிபாட்டுடன் தொடங்கப்பட்டது. பின்பு வரவேற்புரையை ஆசிரியர் தாரணி வழங்கினார். அதனைத் தொடர்ந்து பள்ளியின் முதல்வர் வித்யாசங்கர் இவ்விழாவின் சிறப்புகளைப் பற்றிக் கூறினார்.

தொடந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் இந்த விழா கொண்டாடும் நோக்கம் பற்றி மாணவி ரியா கூறினார்.