ரோட்டரி கிளப் ஆக்ருதி சார்பில் இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம்

ரோட்டரி கிளப் ஆக்ருதி சார்பாக பெண்களுக்கென இலவச மார்பக மற்றும் கர்ப்பபை வாய் புற்றுநோய் பரிசோதனை முகாமை ரோட்டரி ஆக்ருதியின் சர்வதேச சேவை தலைவர் லீமா ரோஸ் மார்ட்டின் தொடங்கி வைத்தார்.

பெண்கள் மத்தியில் புற்றுநோய் தாக்கத்தின் அளவு மற்றும் இறப்பிற்கு மார்பக புற்றுநோய் பொதுவான காரணமாக உள்ளது. மார்பக புற்றுநோயினால் இறக்கும் அபாயத்தைக் குறைக்க, ஆரம்ப கட்டத்திலேயே மார்பக புற்று நோய் பாதிப்பைக் கண்டறியும் வகையில் ரோட்டரி கிளப் ஹீல் திட்டம் வாயிலாக நடமாடும் பரிசோதனை வாகனம் மூலம் பல்வேறு இடங்களில் இலவசமாக இந்த பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் ரோட்டரி கிளப் ஆக்ருதி சார்பாக பெண்களுக்கான இலவச மார்பக மற்றும் கர்ப்பபை வாய் புற்றுநோய் பரிசோதனை முகாமை, ரோட்டரி கிளப் ஆக்ருதி பொதுநிகழ்வுகளின் தலைவர் சோனாலி பிரதீப் ஏற்பாடு செய்திருந்தார். முன்னதாக நடைபெற்ற முகாம் தொடக்க விழாவில் ரோட்டரி மாவட்ட 3201 ன் சிறப்பு குழந்தைகள் நல ஒருங்கிணைப்பாளரும், ரோட்டரி ஆக்ருதியின் சர்வதேச சேவை தலைவருமான டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டின் தொடங்கி வைத்தார்.

இதில் அவருடன் ரோட்டரி கிளப் ஆக்ருதியின் தலைவர் கவிதா கோபாலகிருஷ்ணன் மற்றும் சப்னா ஆகியோர் உடனிருந்தனர். முகாம் தொடக்க விழாவில் சிறப்பு அழைப்பாளராக கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் கலந்து கொண்டார்.

நடமாடும் வாகன பரிசோதனை முகாமிற்கான ஏற்பாடுகளை ரோட்டரி ஹீல் திட்டத்தின் செயலாளர் டாக்டர் விஜயகிரி மற்றும் ஸ்டீபன் ஆகியோர் செய்தனர்.