ப.சிதம்பரம் பிறந்தநாள்: நலத்திட்ட உதவிகளை வழங்கிய இளைஞர் காங்கிரஸ்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் தூய்மை பணியாளர்களுக்கு இலவச சீருடை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரசுதன் வழங்கினார்.

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் அவர்களின் 76 வது பிறந்த நாளை நாடு முழுவதும் காங்கிரசார் கடந்த 16 ம் தேதி கொண்டாடினர். இந்நிலையில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாவட்ட வர்த்தக அணி தலைவர் ஹரிஹரசுதன் தலைமையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பிறந்தநாள் விழா விமரிசையாக நடைபெற்றது.

முன்னதாக, கோவை ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது .தொடர்ந்து எழுபத்து ஆறு தூய்மை பணியாளர்களுக்கு இலவச சீருடை மற்றும் உணவு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத் தலைவர் கந்தசாமி, கோவை செல்வன், சரவணகுமார், முன்னாள் மேயர் வெங்கடாசலம், மகேஷ் குமார், ஷோபனா செல்வன், காயத்ரி, கணபதி சிவகுமார், சௌந்தர குமார், மதியழகன், டென்னிஸ் செல்வராஜ், ஜெர்ரி லூயிஸ், ராகவன், அரிமா ஆறுமுகம், பார்த்திபன், வெள்ளைச்சாமி, காமராஜ் துல்லா, இமயம் ரகமத்துல்லா, சண்முகம், ஜமாலுதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.