தொழில் அமைப்புகளின் கூட்டுக்குழு சார்பாக மத்திய நிதியமைச்சரிடம் வேண்டுகோள்

கோவை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் சார்ந்த அமைப்புகளுக்கான ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் கடன் பெறுவதற்கான தகுதி குறித்த மறுபரிசீலனை மற்றும் கடன்தொகை மறுசீரமைப்பு கால நீட்டிப்பு வேண்டி மத்திய நிதியமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொழில் அமைப்புகளின் கூட்டுக்குழு சார்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் நாராயண் டாட்டு ரானே மற்றும் மத்திய சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறையின் கூடுதல் செயலாளர் மற்றும் மேம்பாட்டு ஆணையர் தேவேந்திரகுமார் சிங் ஆகியோரிடம், வேண்டுகோள்கள் அளிக்கப்பட்டன.

இதுகுறித்த பத்திரிகை செய்தியில்: கடன்தொகை மறுசீரமைப்பின் போது தற்போது உள்ள வரையறையான 50 கோடி ரூபாய் என்பது உயர்த்தப்பட்டு 100 கோடி ரூபாய் வரை வழங்கப்பட வேண்டும்.

கடன்தொகை கட்டுவதற்கான கால நீட்டிப்பு வசதி தற்போதுள்ள 31, மார்ச் 2021 என்பது 30 செப்டம்பர் 2022 வரை நீட்டிக்கப்பட வேண்டும்.