ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கான தொடக்க விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியின் முதலாமாண்டு மாணவர்களுக்கான தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது.

கல்லூரி முதல்வர் உமா விழா நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து பேசினார். இவ்விழாவில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளை கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் லக்ஷ்மிநாராயணசுவாமி கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடக்கி வைத்து பேசினார்.

அவர் பேசும்போது இந்தியா உலகளவில் தொழில்நுட்ப துறையில் முதன்மை பெற்ற நாடக திகழ்கிறது மாணவர்கள் கல்லூரியில் படிக்கும் காலத்தில் திறன் சார்ந்த தொழில்நுட்ப அறிவினை வளர்த்து கொள்ளவேண்டும் இதன் மூலம் வியத்தகு வளர்ச்சியை அடைய முடியும் என்றார்..

பின்னர் கல்லூரியில் செயல்படும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான மையத்தின் இவ்வாண்டுக்கான புதிய கால அட்டவணை நிகழ்வு தொகுப்பினை வெளியிட்டார். இவ்விழாவில் கல்லூரியின் துணை முதல்வர் கோபாலகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவின் நிறைவாக இயந்திரவியல் துறை தலைவர் தனபால் நன்றி கூறினார்.