பஞ்சு மீதான 1%வரி ரத்து: முதல்வருக்கு நன்றி தெரிவித்த சிஸ்பா

பஞ்சு மற்றும் கழிவு பஞ்சு மீதான ஒரு விழுக்காடு (1%) வரியை இரத்து செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் (சிஸ்பா) தமிழக முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்திய பருத்தி கழகம், தமிழகத்திலேயே விற்பனையகத்தையும், கிடங்கினையையும் தொடங்கினால் தமிழகத்தில் உள்ள நூற்பாலைகள் பஞ்சு வாங்க வேண்டி ஆந்திரா, தெலுங்கானா, குஜராத் போன்ற மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் தவிர்க்கப்படுவதோடு, போக்குவரத்து செலவும் குறையும். பஞ்சு வாங்கும் விலையில் போட்டியும் தவிர்க்கப்படும்.

இதுகுறித்து, ஜவுளி மற்றும் கைத்தறி அமைச்சர் காந்தி, கைத்தறித்துறை செயலாளர் அபூர்வா ஆகியோரை தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் துணைத்தலைவர் வெங்கடேசன் மற்றும் கௌரவ செயலாளர் ஜெகதீஸ் சந்திரன் ஆகியோர் சென்னையில் நேரில் சந்தித்து கோரிக்கைகளை விலியுறுத்தினார்கள்.

அதே போல வெளி மாநிலங்களிலிருந்து பஞ்சு கொள்முதல் செய்யப்படும் பொழுது சிறு, குறு நூற்பாலைகள் போக்குவரத்துக் கட்டணம் செலுத்துவதில் பெரும் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பஞ்சின்மீது விதிக்கப்படும் சந்தை நுழைவு வரியை நீக்க வேண்டுமென்பது நெடுநாள் கோரிக்கையாகும். இந்த கோரிக்கையை ஏற்று வெளி மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்யப்படும் பஞ்சு மீதான சந்தை நுழைவு வரி ரத்து செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

இந்த அறிவிப்பை வெளியிட்டதின் பயனாக தமிழக நூற்பாலைகள் பெறும் பயன் அடையும் எனவும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் நன்றிகளைத் தெரிவித்தனர்.