கே.பி.ஆர் கலை கல்லூரியில் “திருக்குறள் நெறியில் அறிவாண்மை” – கருத்தரங்கம்   

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் தமிழ்த் துறையின் சார்பில் (16/04/2021) “திருக்குறள் நெறியில் அறிவாண்மை” இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் பாலுசாமி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக, பேரூர் ஆதீனம் 25ஆம் பட்டம் குருமகா சன்னிதானம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் கலந்துகொண்டு “திருக்குறள் நெறியில் அறிவாண்மை” எனும் தலைப்பில் சிறப்புரை வழங்கி பேசுகையில்:

மனம் தன் போக்கில் சென்றால் ஐம்புலனாலும் கேடு விளையும்.  புலன் அழுக்குகளில் செல்லும் தீமையை நீக்கி நல்லதன் பால் மனத்தைச் செலுத்துவதே அறிவாகும் என்பதை எடுத்துரைத்தார்.

அறிவின் வளர்ச்சிக்குத் துணை புரிவது கல்வி. அக்கல்வி அறிவால் பெரும்பயன் குற்றங்கள் நீக்குதல், நல்லனவற்றை உணர்தல் ஆகியனவாகும் என்பதைக் கூறினார். நல்ல நூல்கள்  மனிதனை  அன்புடையவனாக, இன்சொல் கூறுபவனாக, மெய்மை உணர்பவனாக இறைவனாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதை எடுத்துக் கூறினார். மேலும் அறிவின் பயன் கொண்டு பிற உயிரைத் தன்னுயிர் போல் எண்ணி நலம் செய்தல் வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.