கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நாகராஜன், மாநகராட்சி ஆணையாளர்  குமாரவேல் பாண்டியன்  இன்று (16.04.2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

புரூக் பீல்டு ரோடு பகுதியில் உள்ள சீத்தாலட்சுமி மருத்துவமனை, மொபைல் சிஸ்டம், சிரியன் சர்ச் சாலை, ஆர்.எஸ்.புரம் தபால் அலுவலகம் அருகில் ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  நேரில்  சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களில் சிறப்பு முகாம் வாகனங்கள் செயல்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார்  மருத்துவமனைகளிலும் பொதுமக்கள் கொரோனா  தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளலாம்.

இவ்வாய்வின் போது மாவட்ட ஆட்சி தலைவர் கூறியதாவது:

தற்காப்பு நடவடிக்கைகளான பொது இடங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் எனவும் , முகக்கவசம் கட்டாயம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுவது ஆகியவற்றை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் கூறினார்.மேலும்  முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும், அரசு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து கோவை  மாநகராட்சி பிரதான அலுவலகத்திலுள்ள கொரோனா கட்டுப்பாட்டறையினை பார்வையிட்டார்.