கர்ணன் படத்தை கொண்டாடும் தனுஷ் ரசிகர்கள்

தனுஷ் நடித்த கர்ணன் படம் இன்று வெளியானதை தொடர்ந்து, கோவை மாவட்ட தலைமை தனுஷ் மன்ற ரசிகர்கள் காலை முதலே பட்டாசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

தனுஷ் நடித்த பட்டாஸ் படத்திற்கு பிறகு, ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு இன்று வெளியானது கர்ணன் திரைப்படம். பரியேறும் பெருமாள்   இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயண் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்,இன்று படம் வெளியாகி உள்ளதால்,கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள பாபா காம்ப்ளக்ஸ் திரையரங்கம் முன்பாக, தனுஷ் ரசிகர்கள் காலை முதலே தியேட்டர்களில் பட்டாசுகள்  வெடித்து கர்ணன் படத்தை  கொண்டாடி மகிழ்ந்தனர்.

இது குறித்து கோவை மாவட்ட தலைமை தனுஷ் ரசிகர் மன்ற தலைவர் சங்கர் கூறுகையில்:

நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ் நடித்துள்ள படம் வெளியாகி உள்ளதால் திருவிழா போல இந்த நாளை கொண்டாடுவதாக தெரிவித்தார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ் படம் வெளியான நிலையில், கோவை  மக்கள் கர்ணன் திரைபடத்தை காண   குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வருகை தந்துள்ளது குறிப்பிடதக்கது.