கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையத்தின் புதிய தலைமை அலுவலகம் திறப்பு விழா

கோவை: புலியகுளத்தில் அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையத்தின் புதிய தலைமை அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. நிறுவனத் தலைவர் கோவை சி.எம். ஸ்டீபன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அமைப்பின் மாநகர் மாவட்ட போதகரணித் தலைவர் குருத்துவ ஆயர்.எஸ்.சார்லஸ் வரவேற்புரையும் வாழ்த்து செய்தியும் வழங்கினார். பேராயர். டாக்டர் ஜோயல் மனோகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வாழ்த்து செய்தி வழங்கினார். மாநில மகளிரணி தலைவி கரோலின் விமலா ராணி , கெளரவ ஆலோசகர் எஸ்.கணேஷ் விழா ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

பாஸ்டர் பி.ராஜேஷ் தேவன், எம்.துரை, எம்.ஜான்சன், கே.வில்லியம்ஸ், Br.ஜான் கனகரத்தினம், கே.எல்.சாக்கோ, ஆர்.சாம்சன், பால்ராஜ், பீட்டர் ராஜேந்திரன், லட்சுமணன், எஸ்.ஜோ விமல், கோவிந்தராஜ் (எ) ஜேம்ஸ், என்.ஜே.யேசுதேவன் எம்.ஞான ஆனந்த், பி.ஏ.சுரேஷ்குமார், ஆகியோர் விழாவில் பங்கு பெற்று வாழ்த்துரை வழங்கினார்கள்.

மேலும் இவ்விழாவில் தேர்தல்களில் வாக்களிக்காதவர்களுக்கு வெளிநாட்டில் உள்ளது போல அபராதம் விதித்து அவர்களுக்கு வழங்கும் சிறப்பு சலுகைகளை ரத்து செய்ய வேண்டும் என்றும். தேர்தல்களில் ஜனநாயக கடமையாற்றாமல் இருப்பவர்கள் மீதும், வாக்கை பணத்திற்காக விற்பவரையும், அதை வாங்குபவரையும் பிடித்து கடுமையான தண்டணை வழங்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் விழாவில்  5 கிலோ அரிசி மற்றும் பாத்திரங்கள், துணிமணிகளும், விழாவில் பங்கேற்ற நூற்றூக்கும் மேற்பட்டவர்களுக்கு உணவும் வழங்கப்பட்டது.