பைந்தமிழ் மன்றம்  நல் இறைச்சிந்தனை நிகழ்வு

கோவை, கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் பைந்தமிழ் மன்றம் நடத்திய நல் இறைச்சிந்தனை நிகழ்வு இணைய வழியில்  நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்த்துறைப் பேராசிரியர் முத்துக்குமாரவடிவேல் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை வழங்கினார்.

கல்லூரியின் முதலவர் பாலுசாமி தலைமையேற்றுத் தலைமையுரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக எஸ்.என்.எம்.வி. கலை அறிவியல் கல்லூரியின் நூலகர், பேராசிரியர், உமாமகேஷ்வரி கலந்துக்கொண்டு பேசுகையில் திருப்பாச்சிலாச்சிரமம் திருத்தலத்தில் முயலகன் நோய் தீர்த்த வரலாறு, திருச்செங்கோட்டுத் திருத்தலத்தில் குளிர்சுரம் நீக்கிய வரலாறு, திருவீழிமிழலைத் திருத்தலத்தில் படிக்காசு பெற்ற வரலாறு, திருமயிலைத் திருத்தலத்தில் பூம்பாவை எழுப்பிய வரலாறு, மதுரைத் திருத்தலத்தில் கூன்பாண்டியனின் வெப்புநோயைப் போக்கி நின்றசீர் நெடுமாறனாக்கிய வரலாறு எனச் சைவசமய அடியவர்கள் பலரின் வரலாற்றை எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் தமிழ்த்துறைப் பேராசிரியர் தமிழரசன் நன்றிகூற நிகழ்வு நிறைவடைந்தது. நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரும் தமிழ்த்துறைப் பேராசிரியருமான கோகுல்நாத் தொகுத்து வழங்கிய இந்நிகழ்வில் முதன்மையர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலர் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.