இளமை தோற்றத்தில் மம்முட்டி !

தென்னிந்திய திரையுலகில் 60 வயதை கடந்த நடிகர்கள் இன்னும் கூட முன்னணி ஹீரோக்களாக இருக்கிறார். 60 வயதை கடந்தாலும் இளம் நடிகர்களுக்கு இப்பொழுதும் போட்டியாக உள்ளனர்.

அப்படிப்பட்ட நடிகர்களில் மலையாள நடிகர் மம்முட்டியம் ஒருவர். அவர் நேற்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சில புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சிரியப்படுத்தியுள்ளது. 68 வயதான மம்முட்டி மிகவும் இளமையான தோற்றத்தில் இருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.