உயிர் வேதியல் துறையில் தொடர் சாதனை செய்துவரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி

 

எஸ்.என்.ஆர் அறக்கட்டளையின் கீழ் இயங்கிவரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி உயிர் வேதியல் துறை மாணவியர் பாரதியார் பல்கலைக்கழகத் தேர்வு பட்டியலில் 108 ரேங்க்களையும் 22 தங்கப்பதக்கங்களையும் தொடர்ந்து பெற்று வருகின்றனர். மேலும் கடந்த 7 ஆண்டுகளாக அனைத்து கல்லூரிகளுக்குள் முதன்மை இடத்தை வகுத்து இஆர்பி சண்முகசுந்தரம் விருதினையும் பெற்றுக் கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

1992 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உயிர் வேதியல் துறையானது பிஎஸ்சி, எம்எஸ்சி எம்பில், பிஎச்டி ஆகிய பாடப்பிரிவுகளுடன் மிகச்சிறந்த கட்டமைப்புக் கொண்ட ஆய்வுக்கூடங்களுடன் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கல்லூரியின் உயிர் வேதியல் துறையில் பயின்ற மாணவியர்கள் உலக அளவில் அறிவியல் துறையில் சாதனை புரிந்து வருகின்றனர். விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள், மெடிக்கல் கோடர் கிளினிகல் டேட்டா ஸ்பெஷலிஸ்ட், சைட்டோ ஜெனிடிஸ்ட், குவாலிட்டி கண்ட்ரோல் அனாலிஸ்ட், லேப் டெக்னாலெஜிஸ்ட் போன்ற பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, துபாய், நியூஸிலாந்து, இங்கிலாந்து, ஸ்வீடன் போன்ற பல்வேறு உலக நாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

கோவையில் கடந்த 29 ஆண்டுகளாக பெண்களின் உயர்கல்விக்கு முக்கியத்துவம் கொண்டு இயங்கி வரும் சிறந்த கல்லூரிகளில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியும் ஒன்று. இக்கல்லூரி ‘இந்தியா டுடே’ நாளிதழ் நடத்திய அகில இந்திய அளவிலான தர ஆய்வில் முதல் 50 இடங்களிலும் ‘தி நாளேஜ் ரிவ்யு’ நடத்திய தர ஆய்வில் முதல் 10 மகளிர் கல்லூரிகளுக்கான அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.

மேலும் இதுகுறித்து கல்லூரியின் முதல்வர் சித்ரா பேசுகையில், இக்கல்லூரி தனித்துவம் வாய்ந்து விளங்குவதற்கு எஸ்.என்.ஆர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டி. லட்சுமி நாராயண சுவாமி அவர்களின் தொடர்ச்சியான ஆதரவும் 20 ஆண்டுகளுக்கு மேலான மிகச்சிறந்த அனுபவமிக்க பேராசிரியைகளின் அர்ப்பணிப்பும், மாணவிகளுக்கும், பேராசிரியைகளுக்கும் இடையேயான தனிப்பட்ட வழிகாட்டுதல்களும் உறுதுணையாக உள்ளதாக கூறினார்.