சுகுணா கலைக் கல்லூரி – இந்தியப் பட்டய கணக்காளர் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

 

சுகுணாகலைமற்றும் அறிவியல் கல்லூரி பி.காம், பி்.பி.ஏ. பயிலும் மாணவர்கள் கணக்கு, நிதி, செலவு, வருமான வரி, ஜி.எஸ்.டி என பொருளாதார துறை சார்ந்து பயிற்சி பெறும் விதமாக இந்தியப் பட்டய கணக்காளர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டது.

கல்லூரியின் தலைவர் லட்சுமி நாராயணசாமி தலைமையில் தாளாளர் சுகுணா, ஐ.சி.ஏ.ஐ. தலைவர் மதனகோபால், கல்லூரி முதல்வர் வைத்தியநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

உலக அளவில் இந்திய மாணவர்கள் வர்த்தகம், மற்றும் பொருளாதார திறனை வளர்த்து விதமாக பல்வேறு கல்லூரிகளில் இந்தியப் பட்டய கணக்காளர் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பி.காம், பி்.பி.ஏ. பயிலும் மாணவர்கள் கணக்கு, நிதி, செலவு, வருமான வரி, ஜி.எஸ்.டி என பொருளாதார துறை சார்ந்து பயிற்சி பெறும் விதமாக சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியுடன் இந்தியப் பட்டய கணக்காளர் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய ஐ.சி.ஏ.ஐ. தலைவர் மதனகோபால், இந்திய மாணவர்கள் உலக அளவில் உள்ள பொருளாதார கொள்கைகளை தெரிந்து கொள்ள இது போன்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பயனாக இருக்கும் எனவும், மேலும் வணிகவியல் துறை மாணவர்கள் மட்டுமின்றி தற்போது பட்டய கணக்காளர் துறையில் பொறியியல் மாணவர்களும் நல்ல நிலையில் சாதித்து வருவதாக அவர் தெரிவித்தார்.