நோபல் பரிசு பெற்ற முதல் இஸ்ரேல் பெண் – அடா யோனத்

இஸ்ரேல் படிகவியலாளர் மற்றும் ஆராய்ச்சியாளரான அடா யோனத் 1939ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் பிறந்தார்.

ஜெருசலேமில் உள்ள ஹீப்ரூ பல்கலைக்கழகத்தில் வேதியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். உயிரி வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

இவர் தாக்கும் நோய் கிருமிகளிடம் இருந்து ரிபோசோம்களை ஆண்டிபயாடிக் மருந்துகள் எவ்வாறு பாதுகாக்கின்றன என 20 ஆண்டுகால கடுமையான ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்தார்.
ரிபோசோம்களின் வடிவமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆராய்ச்சிகளுக்காக, வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், தாமஸ் ஸ்டெய்ஸ் ஆகிய இருவருடன் இணைந்து வேதியியலுக்கான நோபல் பரிசை 2009ஆம் ஆண்டு பெற்றார்.
இவர் நோபல் பரிசு பெற்ற முதல் இஸ்ரேலிய பெண் என்ற பெருமைக்குரியவர்.