கோவை மாவட்ட அரிமா சங்கத்தின் இலவச வெட்டிவேர் முகக் கவசம்

கோவை மாவட்ட அரிமா சங்கம் 324-B1 மற்றும் ஆர். கோல்டு இணைந்து சிங்காநல்லூர் மதர்ஸ் வில்லேஜ் வெல்பர் சொசைட்டி பொதுமக்களுக்கு வெட்டிவேர் முகக்கவசத்தை அரிமா மாவட்ட ஆளுநர் கருணாநிதியின் பரிந்துரையின் பெயரில் மாவட்ட அரிமா சங்கத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி அரிமா செந்தில்குமார் வழங்கினார்.

இந்தக் கொடிய கொரோனா நோய் கிருமித் தொற்று தாக்கத்தில் இருந்து, மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், நல்ல தரமான முகக்கவசம் அணிவது அவசியம்.

அரசின் உத்தரவின் படி முகக்கவசம் கட்டயமாகபட்டுள்ளதால், சுவாசத்திற்கு சிறந்த காற்றில் கலந்துள்ள மாசு மற்றும் தூசு போன்றவற்றை சரிசெய்து, நச்சுக் காற்றை வெளியேற்றி நல்ல காற்றை உள் வாங்கும் குணம் கொண்டது, மனித உடலுக்கு மிகச் சிறந்தது, கேடு விளைவிக்காதது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, உடல் சூட்டைத் தணிப்பது என எண்ணற்ற மருத்துவ குணம் கொண்ட பாரம்பரியமாக நமது முன்னோர்களும் – சித்தர்களும் பயன்படுத்திய வெட்டிவேரை கொண்டு இந்த இயற்கை முகக்கவசம் தயாரித்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.