குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் சர்வதேச பயிலரங்கம்

SEAINDIA மற்றும் ஆட்டோமொபைல் துறை, குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி இணைத்து சர்வதேச பயிலரங்கத்தை அண்மையில் நடத்தியது. இப்பயிலரங்கத்தில், அனைத்து துறைகளின் நுண்ணறிவாற்றலை பெறுதல் மற்றும் அதற்கான பயிற்சிகலைப் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. தென்இந்தியாவில் இருந்து சுமார் 250 கல்லூரிகளில் 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்பயிலரங்கில் பங்கேற்றனர்.  வாகன இயக்கவியல், வாகன சோதனை, பிரேக்குகள் சிஸ்டம் வடிவமைப்பு மற்றும் வாகனம் தயாரித்தல் போன்றவற்றின் சவால்களை பற்றிவிரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இச்சர்வதேச பயிலரங்கத்தில் முனைவர். R.S. குமார், முதல்வர், KCT வரவேற்புரை ஆற்றினார். திரு முகேஷ்திவாரி, Convenor of BAJA-2018 from Mahindra Two wheelers, Indore BAJA, அவரது உரையில் கல்லூரி மாணவர்களிடையே உள்ள நெட்வொர்க்கிங் அவர்களின் அறிவை வளப்படுத்த உதவும் என்று கூறினார். ஸ்ரீசங்கர் வானவராயர், இணைதாளாளர், KCT சிறப்புரை ஆற்றினார், இளம் மாணவர்கள் தங்களின் சிந்தனை திறன்களை வளர்த்து வாகனங்களை இந்தியாவிலேயே தயாரித்தல் வேண்டும் என்று எடுத்துரைத்தார்.  கே. வெங்கட்ராஜ், Deputy Director General of SAE INDIA இந்த விழாவை துவக்கிவைத்தார். பொறியியல் மாணவர்கள் BAJA போன்ற போட்டிகளிலும், தரம் மற்றும் தொழில்நுட்பங்களிலும் கவனம்செலுத்த வேண்டியது அவசியம் என்றார்.  முனைவர் எஸ். ஜான் அலெக்சிஸ், HOD, ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்துறை, KCT நன்றியுரை ஆற்றினார்.

Dr பார்த்சத்தராஜ், NATRIP-Indore, பாலாஜி, Brakes India – Chennai, அகண்ந் பிரதாப் சிங், Cummins India Ltd,  ராஜீவ் மொகாஷி, Gabriel India Ltd, Dr வோரா, ARAI Academy மற்றும் வினய் முண்டாடா, Force Motors, Pune ஆகியோர் இவ்விழாவில் சிறப்பு பேச்சாளராக பங்கேற்றனர்.