
கோவை மாநகராட்சி அலுவலகத்தில், குடிநீர் சீராக விநியோகிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம், மாநகராட்சி ஆணையர் மரு.க.கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை ஆணையாளர் காந்திமதி, மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் நடராஜன், மாநகராட்சி பொறியாளர் பார்வதி, செயற்பொறியாளர் லட்சுமணன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பு பொறியாளர் சி.சொக்கலிங்கம், செயற்பொறியாளர்கள் உதய்சிங், ரவிச்சந்திரன் மற்றும் மாநகராட்சி அனைத்து மண்டல உதவி செயற்பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.