மைக்கேல் ஜாப் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு

கோவை மைக்கேல் ஜாப் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக மற்றும் மேலாண்மை துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி நிறுவனர்கள் மேரி ஜாப், கோசி, பாபு வாரு, மேத்யூ பிரான்சிஸ், ஜோசப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை கல்லூரி உதவி பேராசிரியர் கல்பனா தேவி மற்றும் உதவி பேராசிரியர் வெங்கடாசலபதி ஆகியோர் கலந்து கொண்டு, இன்றைய காலத்தில் வணிக மற்றும் மேலாண்மை துறையின் முக்கியத்துவம் குறித்து பல்வேறு தலைப்புகளில் மாணவர்களிடையே உரையாற்றினர்.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் நசீமா, வணிக மேலாண்மை துறை பேராசிரியர் தனலட்சுமி மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவ மாணவியர்கள் பலர் பங்கேற்றனர்.