கே.பி.ஆர்.பொறியியல் கல்லூரியில் “இக்னிட்ரான் – 2020”

கே.பி.ஆர்.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் “இக்னிட்ரான் – 2020” எனும் கல்லூரிகளுக்கிடையேயான தொழில்நுட்பம் மற்றும் கலைப்போட்டிகள் பிப்ரவரி 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 1000 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

இதில் 8 கருத்தரங்குகள், 28 தொழில்நுட்ப நிகழ்ச்சிகள், 12 கேளிக்கை நிகழ்ச்சிகள், தனிநபர் நடனம், கூட்டு நடனம், வினாடிவினா, முகஅலங்காரம், புகைப்படப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

முதல்நாள் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் சாந்தனு பாக்யராஜ், கே.பி.ஆர்.பொறியியல்

கல்லூரி தலைவர் கே.பி.ராமசாமி ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அதில் நடிகர் சாந்தனு பாக்யராஜ் மேடையில் உற்சாகமாக பேசியதுடன், மாணவர்களுடன் நடனமாடியும் கலந்து கொண்ட அனைவரையும் மகிழ்வித்தார். இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் அகிலா, கல்லூரியின் முதன்மை செயலர் ஏ.எம்.நடராஜன் கல்லூரியின் செயலர் முனுசாமி மற்றும் துறைத் தலைவர்கள் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துக்கொண்டனர். இந்த முதல்நாள் பகுதியின் ஒரு பகுதியாக பைக் சாகச போட்டி ஓட்டி கட்டப்பட்டது.

இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகரும், கவிஞருமான ஜோ மல்லூரி கலந்து கொண்டு மாணவர்களிடத்தில் உரையாற்றினார். அப்போது அவர் திரைத்துறையில் தனது பயணம் பற்றி குறிப்பிட்டார். அவர் 25 வருடம் தொடர்ந்து பயணித்து தனது குறிக்கோளை அடைந்ததாகவும், அதேபோல் மாணவர்கள் தங்களது கல்லூரி பருவம் மிக முக்கியமானது என்றும் இப்போதே தங்களுக்கு என்று ஒரு இலக்கையும், லட்சியத்தைப் நிர்ணையித்து அதை அடையும் வரை தொடர்ந்து பயணிக்க வேண்டும், எனவே தேடல் மட்டுமே உன் ஆயுதமாக இருக்க வேண்டும் என்றும் வெற்றி என்பது பெற்றுக் கொள்வது, தோல்வி என்பது கற்றுக்கொள்வது,  நிறைய புத்தகங்கள் படித்து கற்றுக்கொண்டதைவிட அதிகமாக தனது பெற்றோரிடம் கற்றுக்கொண்டதாகவும் குறிப்பிட்டார்.

ஜப்பான் நாட்டு குழந்தைகள் மொபைல்போன் தொழில்நுட்பத்திற்கு அடிமையாகமல் தங்களது மூளைத்திறன்களுக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மேலும் எல்லாவற்றையும் பெருக்கி கொடுத்த தொழில்நுட்ப உலகம், உறவை மட்டும் சுறுக்கிக் கொண்டது என்று குறிப்பிட்டார். நமது தமிழ் மொழியும், பண்பாடும் மிகவும் சிறந்தது அதை போற்றி காப்பதில் மாணவர்கள் அதிக பங்களிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். மனிதனுக்கு உருவம் இல்லாத பெரிய சொத்து குணநலன் மட்டுமே, அதற்கு தினமும் ஒரு மணி நேரமும் யாருடனும் பேசாமல் தன்னை பற்றி பட்டுமே யோசிக்க பழக வேண்டும் என்றார்.

இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் பிளாக்ஷிப்  யூடியூப் சேனல் புகழ் நரேந்திரபிராசாத் மற்றும் தேஜா வெங்கடேஷ், செமபிரஸ் யூடியூப் சேனல் புகழ் இனியன் மற்றும் ராகவி,  நக்ஸலைட்ஸ் யூடியூப் சேனல் புகழ் அருண் மற்றும் சசி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டனர்.