பொள்ளாச்சி வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு

கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இவ்வாய்வில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்திநாதன், பொள்ளாச்சி நகராட்சி ஆணையாளர் காந்திராஜ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் செல்வராஜ், வட்டாட்சியர் தணிகைவேல், பொள்ளாச்சி நகராட்சி பொறியாளர் முருகேசன், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்டத்தின் நகர்புற கிராமப்புற மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப உள்ளாட்சித் துறையின் மூலம் மழைநீர் வடிகால் அமைத்தல், சாலைவசதிகள், தெருவிளக்கு உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அரசு செயல்படுத்தும் வளர்ச்சித்திடப்பணிகள் உரிய முறையில் செயல்படுத்த, சம்மந்தப்பட்ட துறை உயர் அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனடிப்படையில், இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும், சாலை மேம்பாட்டுப்பணிகள், பள்ளிக் கட்டுமானப் பணிகள், கால்நடை சந்தை, காய்கறி மார்க்கெட், அரசு பள்ளி மாணவ மாணவியர் விடுதிகள், மற்றும் பாதாளசாக்கடை திட்டம் தொடர்பாக நேரடி கள ஆய்வு மேற்கொண்டார். மேலும் பொள்ளாச்சியில் நடைபெரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.