மரபின் மைந்தன் முத்தையாவுக்கு தமிழக அரசின் சார்பில் ‘சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது’

மரபின் மைந்தன் முத்தையாவுக்கு ‘சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது’ தமிழக அரசின் சார்பில் வழங்கப்படவுள்ளது.

தமிழ் வளர்ச்சி – விருதுகள் -2019 ஆம் ஆண்டிற்கான தமிழ்ப் புத்தாண்டு விருதுகளான தமிழ்த்தாய் விருது, கபிலர் விருது, கம்பர் விருது, சொல்லின் செல்வர் விருது, ஜி.யு.போப் விருது, உமறுப்புலவர் விருது, இளங்கோவடிகள் விருது, சிங்காரவேலர் விருது, மறைமலையடிகளர் விருது, அம்மா இலக்கிய விருது, அயோத்திதாசப் பண்டிதர் விருது, சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது, உலக தமிழ் சங்க விருதுகள் மற்றும் முதலமைச்சர் கணினி தமிழ் 2018 ஆகிய விருதுகள் வழங்குதல் – விருதாளர்களை தேர்வு செய்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
இதில் மரபின் மைந்தன் முத்தையாவுக்கு ‘சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது’ தமிழக அரசின் வழங்கி கெளரவிக்கப்படவுள்ளது. இது குறித்து இவர் பேசுகையில், மொழிபெயர்ப்பு என்பது ஒரு தகவலை உள்வாங்கி கொண்டு, சொந்த மொழியில் மீண்டும் எழுவது. இதில் நான் எழுவது புதினம் சாராத பகுதிகள். இதில் நிர்வாகவியல் தொடர்பு, ஆன்மிகம், குறிப்பாக ஈஷா சத்குருவின் புத்தகங்கள் இது தவிர சில ஆங்கில கவிதைகள். ஒரு படைப்பாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர் என வெவ்வேறு பகுதிகளில் நான் இயங்கினாலும், பொதுமக்களிடம் சென்று சேராத ஒன்று என்றாள் அது மொழிபெயர்ப்பு. அதனால், இந்த விருதின் மூலம் இப்பகுதியில் மக்களின் பார்வை பரப்புவார்கள் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது. அந்த வகையில் தமிழக அரசுக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.